தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க.. ‘2026ல் கூட்டணி ஆட்சிதான்’ 2024ல் அடித்து சொன்ன அண்ணாமலை! எப்படி?
சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், 108 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. இதுவரை திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்த நிலையில், இம்முறை புதிய அரசியல் மாற்றமாக தவெக வெற்றி பெற்றது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2026 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையை நூற்றுக்கு நூறு சதவீதம் அண்ணாமலை அப்படியே சொல்லி இருப்பதாக சொல்கின்றனர்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அரசியல் ரீதியாக குழப்பமான நிலையை உருவாக்கியுள்ளன. 234 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆனால், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் அடுத்த கட்டமாக ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளார்.

தமிழக அரசியல்
தற்போது இருக்கும் சட்டமன்றத்தின் காலம் மே 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்பதே அரசியல் நடைமுறையாகும். இதனால், பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு மிகக் குறுகிய காலமே உள்ளது. பெரும்பான்மை பெற, குறைந்தது 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது 108 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதால், மேலும் 10 உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது.
கூட்டணி ஆட்சி
இதற்காக பல்வேறு கட்சிகளுடன் பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சில கட்சிகள் கூட்டணி ஆட்சியில் பங்கேற்க தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், எந்தக் கட்சியும் இதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இடதுசாரி கட்சிகள் (4), தேமுதிக (1) ஆகிய கட்சிகளின் சில உறுப்பினர்கள் ஆதரவு வழங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் பெரும்பான்மை
இதனால், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்டும் சாத்தியம் உருவாகலாம். மேலும், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளும் ஆதரவு வழங்கும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது. இந்த ஆதரவுகள் உறுதியாகும் பட்சத்தில், விஜய்க்கு ஆட்சி அமைப்பது சுலபமாகிவிடும்.
தொங்கு சட்டசபை
விஜய்க்கு இன்னொரு அரசியல் வாய்ப்பும் உள்ளது. அதாவது, பெரும்பான்மை ஆதரவு கடிதங்கள் இல்லாத நிலையிலும், ஆளுநர் விஜயை முதல்வராக பதவியேற்க அழைக்கலாம். அப்படி நடந்தால், 15 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உருவாகும். இது அரசியல் ரீதியாக சவாலானதுதான், ஆனால் சாத்தியமற்றது அல்ல என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.
அண்ணாமலை
தற்போது விஜய்க்கு இருப்பது கூட்டணி ஆட்சி என்ற ஒரே வாய்ப்பு மட்டும் தான். இந்த நிலையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சூழலை அப்படியே அண்ணாமலை சொல்லி இருக்கிறார் என்றும் சொல்கின்றனர்.
தனித்து ஆட்சி
கடந்த 2024 பிப்ரவரி 16ம் தேதி பேசிய அண்ணாமலை," எனது எனது கணக்குப்படி 2024 2026 ஆகிய காலகட்டங்களில் உள்ள சூழல் படி 100 சதவீதம் தமிழகத்தில் யாரும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. நிச்சயமாக 2026-ல் கூட்டணி ஆட்சி தான் அமையும். முதல் கணிப்பு படி எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் தமிழகத்தில் முதன் முறையாக கூட்டணி ஆட்சி அமையும்.
பாஜக
2024 2026 காலகட்டத்தில் பாஜக உண்மையாக உழைத்தால் 500 நாட்களுக்கு முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கி பணியாற்றினால் 2026 பாஜகவின் காலமாக இருக்கும். 10 நாட்களுக்கு முன்பு 20 நாட்களுக்கு முன்பு வேட்பாளர்களை அறிவித்தால் அது நடக்காது. இது இரண்டாவது வாய்ப்பு. 2026 தேர்தலில் எந்த கட்சியும் எங்களுக்கு 150 தொகுதி கிடைக்கும், 160 தொகுத்து கிடைக்கும், 180 தொகுதி கிடைக்கும் என சொல்ல முடியாது.
பாஜக படுதோல்வி
அதெல்லாம் 2021 உடன் முடிந்து விட்டது. 2026 இல் நிச்சயம் கூட்டணி ஆட்சி தான் பாஜக முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்தால் நிச்சயம் தமிழகத்தில் தவிர்க்க முடியாத கட்சியாக இருக்கும்" என பேசி உள்ளார். அண்ணாமலை அன்று கூறிய கருத்துக்கள் தற்போது உண்மையாகி இருக்கிறது. தற்போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் சூழல். இருக்கிறது மேலும் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு தான் பாஜக வேட்பாளர்களை அறிவித்த நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் பாஜக படுதோல்வியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு.. பின்னணியில் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை











Click it and Unblock the Notifications