தவெகவிடம் தோல்வியடைந்த ஸ்டாலின், 14 அமைச்சர்கள்.. வாக்கு வித்தியாசம் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 14 அமைச்சர்கள் தவெக வேட்பாளர்களிடம் தோல்வி அடைந்தனர். அவர்கள் அனைவரும் தவெக வேட்பாளர்களிடம் எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர் என்பதை பார்க்கலாம்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில், திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தவெக அடைந்துள்ள இந்த வெற்றி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 14 அமைச்சர்கள் தவெக வேட்பாளர்களிடம் தோல்வி அடைந்திருக்கின்றனர்.

Vijay

2011ஆம் ஆண்டு முதலே கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்தவர் முதல்வர் ஸ்டாலின். கடந்த தேர்தலில் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஸ்டாலின், இம்முறை தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தோல்வி அடைந்தார்.

1971 முதலே காட்பாடி தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன், 1984 மற்றும் 1991 ஆகிய தேர்தல்களில் இதற்கு முன் தோல்வி அடைந்தார். இம்முறை தவெக வேட்பாளர் சுதாகர் 69,868 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ராமு 63,998 வாக்குகளையும் பெற்றனர். துரைமுருகன் 62,225 வாக்குகள் பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு 12,313 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சதீஷ் கிறிஸ்டோபர் 69,947 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் அப்பாவு 1996 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் மட்டுமே தோல்வி அடைந்தவர். தற்போது 3வது முறையாக தோல்வி அடைந்திருக்கிறார்.

மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மதார் பதுருதீனிடம் தோல்வி அடைந்தார். 3வது முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முதல்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார். திருவெறும்பூர் தொகுதியில் 3வது முறையாக போட்டியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் 8,705 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அமைச்சர் எஸ்.முத்துசாமி, ஈரோடு மேற்கு தொகுதியில் 22,250 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் அனந்த் மோகன் 96,836 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெரியகருப்பன் 1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோல்வி அடைந்தார்.

சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் 28,514 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் அருள் பிரகாசத்திடம் தோல்வி அடைந்திருக்கிறார். தூத்துக்குடி தொகுதியில் அமைச்சர் கீதா ஜீவன் 37,731 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரும், நடிகருமான ஸ்ரீநாத்திடம் தோல்வி அடைந்திருக்கிறார்.

ஆலந்தூர் தொகுதியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 29,609 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் எம்.ஹரிஷிடம் தோல்வி அடைந்துள்ளார். மன்னார்குடி தொகுதியில் அமைச்சர் டிஆர்பி ராஜா 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் அமமுக வேட்பாளர் காமராஜிடம் தோல்வி அடைந்திருக்கிறார். ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் 76,311 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் ரமேஷ் குமாரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்தி 16,547 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் கார்த்திகேயனிடம் தோல்வி அடைந்துள்ளார். ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தி 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் தாஹிராவிடம் தோல்வி அடைந்தார். ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் மதிவேந்தன் 57,854 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனிடம் தோல்வி அடைந்தார்.

காங்கேயம் தொகுதியில் அமைச்சர் சாமிநாதன் 59,230 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நடராஜிடம் தோல்வி அடைந்துள்ளார். சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரன் 14,034 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சிவக்குமாரிடம் தோல்வி அடைந்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+