சாதித்த விஜய்.. தமிழகத்தின் முதல் மாற்றுத்திறனாளி எம்எல்ஏவானார் தவெகவின் முனிரத்னம்.. யார் இவர்?
சென்னை: தமிழக வரலாற்றில் முதல் முறையாக மாற்றுத்திறனாளி ஒருவர் எம்எல்ஏவாகி உள்ளார். அவரது பெயர் கே சுந்தர். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவரது பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதியில் கடந்த 2016, 2021 ஆகிய தேர்தலில் திமுக சார்பில் கே சுந்தர் என்பவர் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து இந்த முறை தவெக சார்பில் முனிரத்னம் என்பவர் களமிறங்கினார். அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் மகேஷ் குமார் போட்டியிட்டார்.

இதில் தவெக வேட்பாளர் முனிரத்னம் மாற்றுத்திறனாளி ஆவார். மாற்றுத்திறனாளியை என்பதை தாண்டி விஜய் அவருக்கு சீட் வழங்கினார். தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார்.
நேற்று தேர்தல் முடிவு வெளியான நிலையில் உத்திரமேரூர் தொகுதியில் முனிரத்னம் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 84,917 ஓட்டுகள் வாங்கி வாகை சூடினார். திமுக சிட்டிங் எம்எல்ஏவான சுந்தர் 70,694 ஓட்டுகள் பெற்று 14,223 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு பாமக வேட்பாளர் மமேஷ் குமார் 62,809 வாக்குகள் பெற்று 3ம் இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் மாறம் மாசிலாமணி 5,783 ஓட்டுகள் வாங்கி 4வது இடம் பிடித்தார்.
தமிழகத்தை எடுத்து கொண்டால் மாற்றுத்திறனாளியாக இருப்பவர் எம்எல்ஏவானது கிடையாது. இதன்மூலம் முனிரத்னம் தான் தமிழகத்தின் முதல் மாற்றுத்திறனாளி எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் விஜய்யின் மக்கள் இயககத்தில் 2009ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார். 50 சதவீதம் உடல் குறைபாடு கொண்டவர். இதனால் 'கேலிபர்ஸ்' அணிந்து இருப்பார்.
தற்போதைய தேர்தல் வெற்றி பற்றி முனிரத்னம் கூறுகையில்,, ''எங்களின் உத்திரமேரூர் தொகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. இதனை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தொடர்ந்து பாடுவேன். அவர்களுக்கு தேவையான கேலிப்பர்கள் மற்றும் பிற உபகரணங்களை வழங்குவேன்'' என்றார்.
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல












Click it and Unblock the Notifications