Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளைஞர்கள் திருக்குறள் படிக்கனும்! தமிழில் வாழ்த்திய பிரதமர் மோடி! காவி வள்ளுவர்? போட்டோவே போடலையே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். இளைஞர் அனைவரும் திருக்குறள் படிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வசிக்கும் தமிழர்களிடையே வழக்கமான உற்சாகத்தோடும் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று உழவுத் தொழில் உற்ற நண்பனான கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கலாகவும் கொண்டாடப்படும் நிலையில், காளைகளையும், பசுக்களையும் தயார் செய்து அவற்றிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர் உழவர்கள்.

திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவர் தினம்

பண்டிகை பொங்கல் பண்டிகை மட்டுமல்லாமல் உலகிற்கு திருக்குறளை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினமும் இன்று கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

இதேபோல தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்திய நிலையில் தலைவர்கள் பலரும் பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இளைஞர் அனைவரும் திருக்குறள் படிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இது தொடர்பாக அவர் தமிழில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன" என கூறியுள்ளார்.

திருக்குறள்

திருக்குறள்

மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில்,"மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள்" என கூறியுள்ளார். இதே பதிவினை பிரதமர் நரேந்திர மோடி ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ள நிலையில், பலரும் அதனை லைக் செய்துள்ளதோடு, ரீ-ட்விட்டும் செய்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி #HAPPYPONGAL என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

காவி வள்ளுவர்

காவி வள்ளுவர்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக இதே புகைப்படத்தை பாஜகவினர் பயன்படுத்தி வரும் நிலையில் திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்தை ஒட்டி வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ள பிரதமர் மோடி திருவள்ளுவர் படத்தையே பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+