45 விநாடிகள் சமஸ்கிருத கிரிக்கெட் வர்ணனை.. உச்சி முகந்து பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி!
டெல்லி: 45 விநாடிகள் மட்டுமே சமஸ்கிருத கிரிக்கெட் வர்ணனை செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் இறந்துபோன மொழிகளில் சமஸ்கிருதம் ஒன்று. நமது நாட்டில் சமஸ்கிருதம் மொழி பேசுவோர் எண்ணிக்கை சுமார் 20,000 மட்டும்தான் என்கின்றன புள்ளி விவரங்கள்.
ஆனால் சமஸ்கிருதத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகளுக்கு சமஸ்கிருத பெயர்களையே ஆளும் பாஜக அரசு சூட்டி வருகிறது என்பது இந்தி பேசாத மாநிலங்களின் விமர்சனங்கள்.

பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் விமான நிலையத்தில் கூட சமஸ்கிருதத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அதேபோல சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை மேற்கொள்ளும் முயற்சிகள் வாரணாசியில் நடைபெற்றன. இதற்கு தமது வானொலி நிகழ்ச்சியான மன்கிபாத் மூலம் பிரதமர் மோடி ஏற்கனவே வாழ்த்து தெரிவித்திருந்தார்.
தற்போது, பெங்களூரு குடியிருப்பு ஒன்றில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது சமஸ்கிருதத்தில் வர்ணனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 45 விநாடிகள்தான் இந்த வர்ணனை உள்ளது. இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. சமஸ்கிருதம் மற்றும் கிரிக்கெட் என்ற தலைப்பில் இந்த வீடியோ பகிரப்பட்டது.
This is heartening to see…Congrats to those undertaking this effort.
— Narendra Modi (@narendramodi) October 4, 2022
During one of the #MannKiBaat programmes last year I had shared a similar effort in Kashi. Sharing that as well. https://t.co/bEmz0u4XvO https://t.co/A2ZdclTTR7
இதனையும் பிரதமர் மோடி தற்போது பாராட்டி உள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனைக்கான குடிமக்களின் முயற்சிகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். காசியில் இதேபோன்ற முயற்சியைப் பகிர்ந்து கொண்ட அவர் தனது மனதின் குரல் இணைப்பையும் பகிர்ந்துள்ளார். குடிமகன் ஒருவரின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி, பிரதமர் தமது ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது: "இதனைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறது... இந்த முயற்சியை மேற்கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த ஆண்டு #மனதின்குரல் நிகழ்ச்சி ஒன்றில் இதேபோன்ற முயற்சியை நான் காசியில் பகிர்ந்துகொண்டேன். அதையும் பகிர்கிறேன்.












Click it and Unblock the Notifications