மகாத்மா காந்தியின் கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்த வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பதிவு
டெல்லி : மகாத்மா காந்தியின் கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்த வேண்டும் என்பதே நமது கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் எனவும் தினமான இன்று நமது தேசை துணிச்சலுடன் பாதுகாத்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் மகாத்மா காந்தியடிகளுக்கு பொதுமக்கள் அரசியல் கட்சியினர் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான ஜனவரி 30ஆம் நாள் தியாகிகள் தினமாக இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த இடத்தில் சாதிய பாகுபாடுகளை கலையும் வகையிலும் தீண்டாமையை ஒழிக்கும் வகையில் உறுதி மொழி எடுத்துக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்டோர் காந்தி நினைவு தினத்தையொட்டி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் காந்தியடிகளின் நினைவு தினத்தில் அவரது உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், பாபுஜியின் புண்ணிய திதியில் அவரை நினைவு கூர்தலோடு, அவரது உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும் எனவும், தியாகிகள் தினமான இன்று, நமது தேசத்தை துணிச்சலுடன் பாதுகாத்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் சேவையும், துணிச்சலும் என்றென்றும் நினைவுகூரப்படும் என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications