பாபுவை நம்பும் பாஜக..நிச்சயமாய் நிற்பாரா நிதிஷ்? கூட்டணியை நம்பி ஆட்சியை இழந்த பிரதமர்கள் யார் யார்?
டெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 272 இடங்களில் வெல்லாத பாஜக தற்போது கூட்டணி கட்சிகளை நம்பி 3வது முறையாக ஆட்சி அமைக்கப் போகிறது. இந்நிலையில் ஏற்கனவே கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சியமைத்து பின்னர் ஆட்சியை இழந்த பிரதமர்கள் குறித்து பார்க்கலாம்..
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தில் 18வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் மக்களவைத் தேர்தலானது நாடு முழுவதும் நடைபெற்று முடிந்திருக்கிறது.

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஜூன் நான்காம் தேதி என நேற்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது. எதிர்பார்ப்புகளுக்கு மாறாக பாஜக தனி பெரும்பான்மை பெற முடியாமல் போனது.
நரேந்திர மோடி: அதே நேரத்தில் கூட்டணி கட்சி ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இன்னும் சில நாட்களில் அவர் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். அதற்கு முன்னதாக அமைச்சரவை கூடி 17வது நாடாளுமன்றத்தை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி ஏற்பு நிகழ்ச்சி வரை பிரதமர் நரேந்திர மோடி சாபந்து பிரதமராக தொடர கேட்டுக் கொண்டுள்ளார்.
கூட்டணி ஆட்சி: இதையடுத்து ஆட்சி அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டுள்ளது. நிதீஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவோடு அவர்கள் கூட்டணி ஆட்சியை அமைக்க இருக்கின்றனர். அதே நேரத்தில் இந்தியா கூட்டணியும் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருவது உலக அளவிலான கவனத்தைப் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சி அமைத்து அதனை இழந்த சம்பவங்களும் நடைபெற்று இருக்கிறது.
நம்பிக்கை இல்லா தீர்மானம்: இந்திய நாடாளுமன்றத்தை பொறுத்த வரை இதுவரை பல நம்பிக்கை இல்லா தீர்மானங்களை சந்தித்து இருக்கிறது. இதுவரைக்கும் 28 நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 545 உறுப்பினர்களில் நியமன எம்பிக்கள் தவிர்த்து 543 எம்பிக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். 272 எம்பிக்கள் ஆதரவளித்தால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோல்வியை சந்திக்க வைக்க முடியும்.
ஆட்சி இழப்பு: இதற்கு முன்னர் பிரதமர்களாக இருந்த மன்மோகன் சிங்கைத் தவிர அனைவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொண்டு இருக்கின்றனர். இந்திரா காந்தி மட்டும் 15 நம்பிக்கை இல்லா தீர்மானங்களை கண்டிருக்கிறார். முதல் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டவர் பிரதமர் நேரு. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சி அமைத்து அதனை இழந்த பிரதமர்களும் உண்டு.
மொரார்ஜி தேசாய்: 1979ஆம் ஆண்டில் பிரதமராக மொரார்ஜி தேசாய் இருந்தார். அப்போது அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்த அவர் தொடர்பாக விவாதம் முடிவதற்கு முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு பிறகு அவர் அரசியலில் இருந்தே ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
விபி சிங்: கடந்த 1990 ஆம் ஆண்டு ஜனதா தள ஆட்சியின்போது பிரதமராக இருந்த விபி சிங் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் 11 மாதங்களிலேயே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக அந்த கட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த பாஜக அதனை விளக்கிக் கொண்டது. இதை அடுத்து நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் விபி சிங் தோல்வி அடைந்தார் இதை அடுத்து அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது.
தேவகவுடா: பிறகாக 7 ஆண்டுகளில் அதாவது 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகளின் ஆதரவோடு இந்தியாவின் 11வது பிரதமராக தேவகவுடா ஆட்சிப் பொறுப்பேற்றார். ஆனால் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் பதினோராம் தேதி அவர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர் கொண்டதையடுத்து அவருக்கு 158 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே கிடைத்த நிலையில் 10 மாதங்களில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
வாஜ்பாய்: அதற்குப் பிறகாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் ஒரு முறை பதவியை இழந்தவர் வாஜ்பாய். 1999 ஆம் ஆண்டில் ஜெயலலிதா பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ள அவர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொண்டார். பகுஜன் சமாஜ் கட்சியும் வாஜ்பாய் அரசுக்கு எதிராக வாக்களிக்க ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் தனது ஆட்சியை இழந்தார். பிறகு நடந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications