காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி ராஜினாமா.. பிரியங்கா இன்று சொன்ன கருத்து என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டிவிட்டரில் அண்ணன் ராகுலுக்காக உருகிய பிரியங்கா காந்தி!-வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்த ஒரு நாள் கழித்து, அவரது சகோதரியும், கட்சியின் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி அதுபற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "நீங்கள் செய்துள்ளதை போன்ற தைரியமான முடிவை சிலரே எடுக்க முடியும். உங்கள் முடிவுக்கு எனது சிறந்த மரியாதை." இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    Priyanka Gandhi backs Rahul Gandhi decision

    ராகுல் காந்தி எழுதிய நான்கு பக்க கடிதத்தை ட்வீட்டில் மேற்கோள் காட்டி பிரியங்கா காந்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

    லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி நேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் வெறும் 52 இடங்களை மட்டுமே வென்றது. இதையடுத்து, தேர்தல் முடிவு வெளியான இரண்டே நாட்களில், தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்திருந்தார் ராகுல் காந்தி.

    "காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில், 2019 தேர்தலில் தோல்வியடைந்ததற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். எங்கள் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு பொறுப்பை எடுப்பது முக்கியமானது. இந்த காரணத்தினால்தான் நான் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்" என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார். தலைவர் பதவியை ராஜினாமா செய்ய கூடாது என்று, கட்சியின் மூத்த தலைவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் புறக்கணித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+