டெய்லியும் 'சர்ச்சை' Bag.. ஒரு முடிவோடு பிரியங்கா காந்தி.. நாடாளுமன்றம் சலசலப்பு- கடுப்பில் பாஜக!
டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளரும் லோக்சபா எம்பியுமான பிரியங்கா காந்தியின் நாடாளுமன்ற வருகை ஒவ்வொரு நாளும் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. தற்போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரியங்கா காந்தி ஒரு Bag- ஐ தோளில் போட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரியங்கா காந்தியின் Bag வியூகமானது பாஜகவை கடுப்பேற்றி இருக்கிறது.
30 ஆண்டுகளாக தேர்தல் பிரசாரம் மட்டுமே செய்து வந்த பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 2024 லோக்சபா தேர்தலில் பிரியங்கா காந்தி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2024 தேர்தலில் பிரியங்கா களம் காணவில்லை.

இதனைத் தொடர்ந்து வயநாடு லோக்சபா தொகுதியில் தமது அண்ணன் ராகுல் காந்தி எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றார் பிரியங்கா காந்தி. இதனையடுத்து நேரு குடும்பத்தின் இன்னொரு வாரிசாக நாடாளுமன்றத்தில் காலடி வைத்தார் பிரியங்கா காந்தி.
நாடாளுமன்றத்தில் பிரியங்காவின் பேச்சும் நடவடிக்கைகளும் பெரும் கவனம் பெற்று வருகிறது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அவரது அண்ணன் ராகுல் காந்தியைப் போலவே பிரியங்காவின் செயல்பாடுகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. வயநாடு தொகுதி நிலைமை தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கேரளா எம்பிக்களுடன் நேரடியாக சென்று சந்தித்தது தொடங்கி பிரியங்கா காந்தியின் ஒவ்வொரு நகர்வும் கவனமாக பார்க்கப்பட்டு வருகிறது.
அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் அதானனி விவகாரத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினர். அதானி ஊழல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு மறுப்பதைக் கண்டித்து இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றது. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக இந்தப் போராட்டத்தை நடத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர் இந்தியா கூட்டணி எம்பிக்கள். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வந்தார்.
அதானி- மோடி உருவங்களை முகமூடிகளாக அணிந்து காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல் காந்தி ஓரங்க நாடகம் அரங்கேற்றினார். மேலும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி, அதானி- மோடி உருவம் பொறித்த Bag கொண்டு வந்திருந்தார். பிரியங்கா காந்தியின் இந்த தோள் பை குறித்து ராகுல் காந்தி ஆர்வமுடன் கேட்டறிந்தார். இந்த படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்றும் நாடாளுமன்றத்துக்கு ஒரு bag உடன் பிரியங்கா காந்தி வருகை தந்தார். அதில் பாலஸ்தீன கொடூரங்களை, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை விவரிக்கும் காட்சிகள் படங்களாக இடம் பெற்றிருந்தன.
பிரியங்கா காந்தியின் இந்த bag தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. பாஜக எம்பி சம்பித் பத்ரா கூறுகையில், காந்தி குடும்பம் எப்போதும் இப்படியான பைகளைத்தான் சுமந்து கொண்டிருக்கிறது. இது சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்கிற தேர்தல் நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என விமர்சித்தார்.
இதற்கு பிரியங்கா காந்தி தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிலளிக்கையில், தங்களது நம்பிக்கையை சிந்தனையை தனிப்பட்ட நபர் வெளிப்படுத்த உரிமை உண்டு. இஸ்ரேல் மக்களும் வன்முறையை யுத்தத்தை விரும்பவில்லைதானே.. இஸ்ரேல் அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளை அவர்களும் தடுத்து நிறுத்தவே போராடுகின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக பாலஸ்தீன மக்களுக்காக பிரியங்கா காந்தி குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications