"மோடி அரசில் சீக்கியர்கள் இனப்படுகொலை"- டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் "ஸ்லீப்பர் செல்கள்" சேட்டை!
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசில் சீக்கியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் எழுதி வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் சீக்கியர் வாழும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் எனும் தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக 1980களில் ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. பிந்தரன்வாலே தலைமையிலான இந்த ஆயுதப் போராட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அழித்தொழித்தார்.

பஞ்சாப் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலையே பிந்தரன் வாலே தலைமையிலான காலிஸ்தான் பயங்கரவாதிகள் தங்களது தலைமையகமாக கொண்டு செயல்பட்டனர். இதனால் பஞ்சாப் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து பிந்தரன்வாலே உள்ளிட்ட பயங்கரவாதிகளை வேட்டையாடி அழித்தது. இதற்காகவே பிரதமர் இந்திரா காந்தி 1984-ல் சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் தேடித் தேடி இனப்படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் மீதான வழக்குகள் இப்போதும் நடைபெற்று வருகின்றன.
1990கள் வரை பஞ்சாப் மாநிலத்தை பற்றி எரிய வைத்த இந்த காலிஸ்தான் பயங்கரவாத முழக்கம் தணிந்து போனது. வெளிநாடுகளுக்கு தப்பிப் போன காலிஸ்தான் பயங்கரவாதிகள் சமீப காலமாக தங்களது கோரமுகத்தை காட்டி வருகின்றனர். டெல்லியில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஓராண்டு காலம் நடந்த விவசாயிகள் போராட்டத்துக்குள் ஊடுருவி டெல்லி செங்கோட்டையில் காலிஸ்தான் பயங்கரவாத இயக்க கொடி ஏற்றியது நாட்டை பெரும் அதிர்ச்சியடைய வைத்தது. அத்துடன் பஞ்சாப், ஹரியானா, டெல்லி ஆகிய இடங்களில் அரசு அலுவலகங்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் காலிஸ்தான் கொடியை பறக்க விடுவது, காலிஸ்தான் முழக்கங்களை எழுதி வைப்பது, காலிஸ்தான் ஆதரவு போஸ்டர்களை ஒட்டுவது என ஸ்லீப்பர் செல்கள் தொடர்ந்து பயங்கரவாத செயல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் இன்று 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் , காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் ஸ்லீப்பர் செல்கள், அந்த இயக்கத்தை ஆதரித்து முழக்கங்களை எழுதி வைத்தனர். அதில், மோடி அரசு சீக்கியர்களை இனப்படுகொலை செய்கிறது எனவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. காலிஸ்தான் வாழ்க என்கிற முழக்கமும் அதில் இடம் பெற்றிருந்தது. இந்த வாசகங்களை போலீசார் விரைந்து சென்று அழித்தனர்.
#WATCH | Pro-Khalistan slogans written on the wall of Maharaja Surajmal Stadium Metro Station are being removed by the Delhi Police https://t.co/2mcKBfqJw3 pic.twitter.com/ss7UnKJM5o
— ANI (@ANI) August 27, 2023
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications