நபிகள் நாயகம் குறித்து அவதூறு- இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் - அல்கொய்தா மிரட்டல்
டெல்லி: இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் அவதூறாக பேசிய விவகாரத்துக்காக இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, உ.பி. மற்றும் குஜராத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.
டிவி விவாதம், சமூக வலைதளங்களில் பாஜகவின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியும் பதிவிட்டும் இருந்தனர். இந்த விவகாரம் இப்போது சர்வதேச பிரச்சனையாக வெடித்துள்ளது. ஈரான், ஈராக் உட்பட வளைகுடா நாடுகள், இஸ்லாமிய நாடுகள் பலவும் மத்திய அரசை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. மதவெறி கொண்ட தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானும் மத்திய அரசை விமர்சித்திருக்கிறது.
Recommended Video

இத்தகைய எதிர்ப்புகளால் நுபுர் சர்மாவை பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்தும் நவீன் ஜிண்டாலை பாஜகவில் இருந்து நீக்கியும் அக்கட்சி மேலிடம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனாலும் இந்த பிரச்சனை ஓயவில்லை. மத்திய அரசு மீதான விமர்சனங்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்தும் பதில் தந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நபிகள் நாயகம் குறித்த அவதூறுகளுக்காக இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக அல்கொய்தா இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. அல்கொய்தாவின் பெயரில் ஜூன் 6-ந் தேதியிட்ட மிரட்டல் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளதாவது: நபிகள் நாயகத்தின் மரியாதையை காப்பாற்றுவதற்கான யுத்தம் நடத்துவோம்.டெல்லி, மும்பை, உ.பி. குஜராத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என்பதை காவிரி பயங்கரவாதிகள் அறிந்து கொள்ளட்டும் என்று அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.
-
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications