குடியரசுத் தின கொண்டாட்டத்திற்கு சிறு பாதிப்பும் ஏற்படாது... அமைதியான முறையில் பேரணி -விவசாயிகள்
டெல்லி: ஜனவரி 26-ம் தேதியன்று அமைதியான முறையில் மட்டுமே டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாங்கள் நடத்தும் டிராக்டர் பேரணியால் குடியரசுத் தினக் கொண்டாட்டத்திற்கு சிறு பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியை அவர்கள் கொடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெறக் கோரி தலைநகர் டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிய விவசாய சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தது.
மேலும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவையும் நியமித்தது. இந்நிலையில் அந்தக் குழுவில் இருந்து பூபேந்தர் சிங் மான் விலகிக் கொண்டார்.
இதனிடையே வரும் ஜனவரி 26-ம் தேதி தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில் மட்டுமே டிராக்டர் பேரணி நடத்துவோம் என்றும் டிராக்டர்களில் தேசியக் கொடியை பறக்கவிட்டு இந்த பேரணியை நடத்தவுள்ளதாகவும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தங்கள் பேரணி மூலம் குடியரசுத் தினக் கொண்டாட்டத்துக்கு சிறு பாதிப்பு கூட ஏற்படாது எனவும் அவர்கள் உறுதி தந்துள்ளனர்.
டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் இதனைக் கூறியுள்ளனர். மேலும், 2024-ம் ஆண்டு மே மாதம் அதாவது மத்திய அரசின் ஆட்சிக்காலம் முடியும் வரை போராட்டத்தை தொடரவும் தாங்கள் தயாராக உள்ளதாக அதிர்ச்சி அளித்திருக்கின்றனர்.
இதனால் புதிய வேளாண் சட்ட விவகாரத்தை மத்திய அரசு மிகுந்த கவனமுடன் கையாண்டு வருகிறது. சுமூகமான முறையில் தீர்வு எட்டவேண்டி அதற்கான நடவடிக்கைகளை சளைக்காமல் மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications