ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தேசவிரோதிகள்தான்... வேதாந்தா வக்கீல் ஹரீஷ் சால்வே 'விசுவாச' வாதம்
டெல்லி: காற்று, நீரை மாசுபடுத்தி மக்கள் உயிர்களை குடிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போர்ராடியவர்கள் தேசவிரோதிகள் என்று உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே சாடினார்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடினால்தான் மக்கள் வாழ முடியும் என்கிற நிலைமை உருவானது. அந்த அளவுக்கு சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தி மக்களை நடைபிணங்களாக்கி வைத்திருந்தது ஸ்டெர்லைட்.

இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 14 அப்பாவிகள் பலியாகினர். அப்போது ரஜினிகாந்த் உள்ளிட்டோர் சொன்னது, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக விரோதிகள், நக்சலைட்டுகள், தேசவிரோதிகள் ஊடுருவியதால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது.
இந்த நிலையில் இன்று ஆக்சிஜன் உற்பத்திக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவின் சார்ப்பாக மூத்த வழக்கறிஞர் காலின் கொன்சால்வேஸ் ஆஜராகினார்.
அவர் தமது வாதத்தின்போது, மக்களுக்கு ஆக்சிஜன் தேவை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். நாங்கள் ஒன்றும் தேசவிரோதிகள் அல்ல என்றார். அப்போது குறுக்கிட்ட வேதாந்தா வக்கீல் ஹரீஷ் சால்வே, ஆமாம் நீங்கள் தேசவிரோதிகள் என சாடினார்.
அப்போது நீதிபதி சந்திரசூட், வக்கீல் சால்வேயை பார்த்து பேசாம விடுங்களேன்.. என்றார்.












Click it and Unblock the Notifications