டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லிக்குள் நுழையும் பாதையில் தடுப்புகளை வைத்த போலீஸ்.. அடித்து நொறுக்கிய விவசாயிகள்!

Google Oneindia Tamil News

டெல்லி: சிங் எல்லையிலிருந்து பேரணி நடத்தும் விவசாயிகள் டெல்லியில் நுழைவதை தடுக்க போலீஸாரால் அமைக்கப்பட்ட தடுப்புகளை அடித்து நொறுக்கினர்.

வேளாண் சட்டங்களை முற்றிலும் ரத்து செய்யக் கோரி விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாக சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுகள் எட்டப்படாததால் குடியரசுதினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த அறிவித்தார்கள்.

Protestors break police barricading to enter delhi

அதன்படி இன்று விவசாயிகள் தங்கள் டிராக்டர் பேரணியை தொடங்கினர். குடியரசுத் தினவிழா அன்று முதல்முறையாக இது போன்ற எதிர்ப்பு பேரணி நடைபெறுகிறது. பேரணியாக வந்த விவசாயிகளிடம் திடீரென புதிய பாதையில் செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினார்கள். ஆனால் அதை ஏற்க விவசாயிகள் மறுத்தனர்.

பல இடங்களில் போலீஸ் வாகனங்களை விவசாயிகள் கைப்பற்றியதால் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. அப்போது போலீஸ் அதிகாரிகளுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த போது விவசாயிகள் மீது சரமாரியாக அடித்தனர்.

இதனால் டெல்லி எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே விவசாயிகள் பேரணி கர்னல் பைபாஸ் பகுதியை அடைந்த போது அவர்கள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க அங்கு பேரிகாடுகள் வைக்கப்பட்டிருந்தன.

இதை விவசாயிகள் அடித்து நொறுக்கினர். இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

English summary
Protestors at Karnal bypass break police barricading to enter Delhi as farmers tractor rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X