டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுங்க - இந்தியாவுக்கு வங்கதேச அமைச்சர் அட்வைஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கவும், அரசியலமைப்பை பாதுகாக்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கதேச கல்வி அமைச்சர் திபு மோனி தெரிவித்துள்ளார்.

Provide safety to minorities in India - Bangladesh education minister Dibu moni

இந்தியா பவுண்டேசன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த இந்தியா ஐடியாஸ் கான்கிலேவ் என்ற நிகழ்ச்சியில் பல மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பொருளாதார வல்லுநர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வில் வங்கதேசத்தின் கல்வி அமைப்பு திபு மோனி கலந்துகொண்டு உரையாற்றி இருக்கிறார். அதில், "இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருடைய அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்ற உறுதியை அளிக்க இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

வெறுப்பு என்னும் நெருப்பு குருடாக்குகிறது! முஸ்லிம் என நினைத்து இந்து கொலை.. ராகுல் காந்தி கண்டனம் வெறுப்பு என்னும் நெருப்பு குருடாக்குகிறது! முஸ்லிம் என நினைத்து இந்து கொலை.. ராகுல் காந்தி கண்டனம்

இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையின மக்களை அரசு பாதுகாக்க வேண்டும். அனைத்து நாட்டவர்களுக்கும் இது பொருந்தும். உலகளவில் மதிப்புமிக்க நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்க, அதன் நிறுவன தந்தைகளால் அரசியலமைப்பில் கூறப்பட்டு இருக்கும் கனவுகளை நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்திய குடிமக்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதுடன் உத்திரவாதம் அளிக்க வேண்டும். தனது குடிமக்களின் திறனை இந்தியா ஊக்குவிக்கலாம். பட்டியல் சாதியினர், பழங்குடியின மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சமூகத்தின் அனைத்து வகையான மக்களுக்கு அவரவர் உரிமைகளை வழங்க வேண்டும்.

மத சுதந்திரம் மற்றும் மத விவகாரங்கள் குறித்த அரசியலமைப்பின் விதிகளை எந்த விதமான சார்பு நிலையும் இன்றி நடுநிலையாக செயல்படுத்தினால் மத நல்லிணக்கம் வலுப்படும். அதன்மூலம் அமைதியை நிலைநாட்டலாம்." என்றார்.

English summary
Provide safety to minorities in India - Bangladesh education minister Dibu moni: சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கவும், அரசியலமைப்பை பாதுகாக்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கதேச கல்வி அமைச்சர் திபு மோனி தெரிவித்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X