எடப்பாடி தலையில் இடியை இறக்கும் புகழேந்தி-இரட்டை இலை, பொதுச்செயலர் பதவி-தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி
டெல்லி: அண்ணா திமுகவின் இரட்டை இலை சின்னம் மற்றும் பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி மனு அளித்துள்ளார். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து பெங்களூர் புகழேந்தி இந்த மனுவை அளித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வருகிறார். அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிடமே இருக்கிறது.

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் முன்னர் அனுமதி அளித்திருந்தது. இதனடிப்படையில் தேர்தல் ஆணையமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியின் மனுவை டிஸ்மிஸ் செய்தது. மேலும் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் எனவும் அனுமதி அளித்தது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மற்றும் பொதுச்செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. தர்மமே இறுதியில் வெல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பும் தெரிவித்திருந்தது.
அதிமுகவில் மூத்த தலைவர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை சிவி சண்முகம் எம்பி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த பின்னணியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி இன்று ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம்- பொதுச் செயலாளர் பதவி குறித்து விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனடிப்படையில் இரட்டை இலை சின்னம், பொதுச் செயலாளர் பதவி குறித்த விசாரணையை தேர்தல் ஆணையம் விரைவாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
-
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்!












Click it and Unblock the Notifications