ரபேல் டீலிங்.. இந்திய தரகருக்கு "கிப்ட்டாக" சென்ற பல கோடி ரூபாய்.. பிரான்ஸ் செய்தி நிறுவனம் பரபரப்பு
டெல்லி: ரபேல் விமான ஒப்பந்தம் செய்த போது இந்தியாவில் இருந்த தரகர் ஒருவருக்கு பிரான்சின் டஸால்ட் நிறுவனம் பல கோடிகளை கிப்ட்டாக கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்தியாவுடன் இந்த ஒப்பந்தத்தை செய்து முடிக்க நடத்தப்பட்ட தரகு வேலைக்காக பல கோடிகளை டஸால்ட் நிறுவனம் தரகர் ஒருவருக்கு வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
பிரான்சின் டஸால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்தியா 36 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதோடு ரபேல் விமானத்தை இந்தியாவில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இதுவரை 14 ரபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளது.

ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதாக புகார் எழுந்து, உச்ச நீதிமன்றம் குற்றம் எதுவும் நடக்கவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை ரபேல் விமான ஒப்பந்தம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. எது என்ன சர்ச்சை?
ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு வழங்கிய டஸால்ட் நிறுவனத்தின் கணக்கு வழக்குகள்தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.
டஸால்ட் நிறுவன வரவு, செலவுகளை பிரான்ஸ் அரசின் ஊழலுக்கு எதிரான ஏஜென்சி ஆடிட் செய்த போது அதில் முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆடிட் தகவலின்படி 2016ல் ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்ட பின் 2017ல் டஸால்ட் நிறுவனம் இந்தியாவில் இருக்கும் தரகர் ஒருவருக்கு பெரிய தொகை ஒன்றை பரிசாக கொடுத்துள்ளது.
2017ல் டஸால்ட் நிறுவனத்தின் கணக்கில் இருந்து 508925 யூரோ இந்தியாவில் இருக்கும் தரகர் ஒருவருக்கு சென்றுள்ளது. வாடிக்கையாளருக்கு அளிக்கப்பட்ட கிப்ட் என்ற பெயரில் இந்த பரிசு சென்றுள்ளது. இதை முதலில் பிரான்சின் ஊழலுக்கு எதிரான அரசு ஏஜென்சி கண்டுபிடித்த நிலையில், பிரான்சின் மீடியாபார்ட் என்ற செய்தி நிறுவனம் அதை வெளியே கொண்டு வந்துள்ளது.
இந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தியாவில் இருக்கும் டேஃப்சிஸ் நிறுவனத்திற்கு இந்த பணத்தை டஸால்ட் நிறுவனம் அனுப்பியதாக கூறப்படுகிறது. பிரான்ஸ் அரசு செய்த ஆடிட் அறிக்கையிலும் இந்த பண பரிவர்த்தனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை குறித்து விளக்கம் அளித்துள்ள டஸால்ட் நிறுவனம், ரபேல் விமானத்தின் டம்மி மாடலை வாங்க டேஃப்சிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தோம்.
50 டம்மி ரபேல் மாடலுக்காக கொடுக்கப்பட்ட பணம்தான் இது என்று டஸால்ட் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் இந்த டம்மி ரபேல் விமானங்களை வாங்கியதற்கான ஆதாரம் எதுவும் டஸால்ட் நிறுவனத்திடம் இல்லை. அதோடு பணபரிவர்த்தனையில் டம்மி மாடல் என்பதை பற்றி டஸால்ட் நிறுவனம் எதுவும் சொல்லவில்லை.
மாறாக இந்தியாவில் இருக்கும் தரகருக்கு அளிக்கப்படும் பரிசு என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்தியாவில் இருக்கும் தரகர் ஒருவருக்கு முறைகேடாக டஸால்ட் நிறுவனம் 508925 யூரோவை (4,38,41,199 ரூபாய்) அனுப்பி உள்ளதாக மீடியாபார்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதான் தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு காரணம்.
இன்னொரு பக்கம் இந்த தவறு நடந்ததை கண்டுபிடித்த பின்பும் கூட பிரான்ஸ் அரசின் ஊழலுக்கு எதிரான ஏஜென்சி நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இதனால் அந்த ஏஜென்சிக்கும் இதில் பங்கு இருக்கலாம் என்று அந்த செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த டேஃப்சிஸ் நிறுவனம் இதனால் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
டேஃப்சிஸ் நிறுவனம் 2017ல் இந்த தொகையை வாங்கியதாக புகாரில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு மிகவும் நெருக்கமானவர் சுஷேன் குப்தா . இவர்தான் அக்ஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் விவிஐபி ஹெலிகாப்டர்களை வாங்குவதில் ஊழல் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். இவர் மீது மணி லாண்டரி புகார் உள்ளது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ரபேல் ஒப்பந்தத்தில் இவர் பெயர் அடிப்பட்டுள்ளது. முன்னதாக ரபேல் ஒப்பந்தத்தில் 126 விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்களை மட்டும் வாங்குவதாக மத்திய அரசு ஒப்பந்தம் செய்ததாகவும், அதோடு இதை அதிக விலைக்கு வாங்க முடிவு செய்ததாகவும் கூறி மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டி இருந்தது. அதோடு இதில் இந்துஸ்தாஸ் உடன் ஒப்பந்தம் செய்யாமல் ரிலையன்ஸ் உடன் டஸால்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது தவறும் என்று ராகுல் காந்தி புகார் அளித்து இருந்தார்.
ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரபேல் வழக்கில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை இல்லை, யார் மீதும் எப்ஐஆர் பதிய வேண்டியது இல்லை, இதை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications