அமெரிக்காவே நடவடிக்கை எடுக்குது.. நீங்க ஏன் தயங்குறீங்க? உடனே அதானியை அரெஸ்ட் பண்ணுங்க - ராகுல்
டெல்லி: தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் அமெரிக்க செக்யூரிட்டி கவுன்சில் கவுதம் அதானி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது. மேலும், அதானிக்கு எதிராக கைது வாரண்டும் பிறப்பித்திருக்கிறது. இந்நிலையில், அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "அதானி மீது லஞ்ச புகார்கள் உள்ளபோதும் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் அவர் சுதந்திரமாக வலம் வருகிறார். இந்த புகாரில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதானி முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும். இந்திய மற்றும் அமெரிக்க சட்டங்களை அதானி மீறியிருப்பது, அமெரிக்கா நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகள் மூலம் தெளிவாகியுள்ளது.

அதானி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், மேலும் அவரை பாதுகாத்துவரும் செபி தலைவர் மதாபி புச் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடி இருக்கும்வரை, அதானி இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க குரல் எழுப்பப்படும்" என்று கூறியுள்ளார்.
அதானி குழுமத்தின் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. சமீபத்தில் கூட ஹிண்டன்பர்க் எழுப்பியிருந்த குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதும் பேசப்பட்டது. பங்கு சந்தையில் அதானியின் பங்குகளின் மதிப்பை உயர்த்த முறைகேடுகள் செய்யப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் முறைகேடுகள் எதிலும் அதானி நிறுவனம் ஈடுபடவில்லை என்று செபி சொல்லிவிட்டதால் வழக்கும் நீர்த்துப்போனது.
இப்படி இருக்கையில் மீண்டும் அதானி குழுமம் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்த முறை அமெரிக்க செக்யூரிட்டி கவுன்சில் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. அதாவது இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் உடன் மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்ய, அமெரிக்காவின் மாநில மின்சார நிறுவனங்களை வற்புறுத்த லஞ்சம் தர அதானி குழுமம் முன்வந்திருக்கிறது. ரூ. 2,029 கோடியை லஞ்சமாக கொடுக்க அதானி குழுமம் முன்வந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க பெடரல் நீதிமன்றம் அதானிக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பின்னணியில்தான், அதானியை கைது செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
-
சத்தீஸ்கர் நிலக்கரி சுரங்க பகுதியை பாதுகாக்க 16 லட்சம் மரங்களை நடவு செய்யும் அதானி நிறுவனம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications