கபில் சிபலைத் தொடர்ந்து...குலாம் நபியும் பல்டி...ராகுல் காந்திக்கு க்ளீன் சிட்!!
டெல்லி: ''பாஜகவுடன் கூட்டு வைத்தே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவுக்கு நாங்கள் கடிதம் எழுதி இருந்ததாக ஒருபோதும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறவில்லை'' என்று மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தும் பல்டி அடித்துள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் அந்தக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்து வருகிறது. இடைக்கால தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக சோனியா காந்தி தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, இன்று கூடிய கூட்டத்தில் ராகுல் காந்திக்கும், மூத்த தலைவர்களுக்கும் இடையே விவாதம் எழுந்தது.

தலைவர் சோனியா காந்தி உடல் நலம் சரியில்லாதபோது ஏன் கடிதம் அனுப்ப வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி இருக்கும்போது, ஏன் கடிதம் அனுப்ப வேண்டும் போன்ற பல்வேறு கேள்விகளை ராகுல் காந்தி சோனியாவுக்கு கடிதம் எழுதிய தலைவர்கள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கிடையே பாஜகவுடன் கூட்டு சேர்ந்து இந்தக் கடிதம் அனுப்பபட்டு இருந்ததா என்று மூத்த தலைவர்கள் கபில் சிபல், குலாம் நபி ஆசாத்திடம் ராகுல் காந்தி கேட்டு இருந்ததாக செய்தி வெளியானது. இது விவாதத்தை கிளப்பியது. ஆனால், இதை இருவரும் மறுத்து, தங்களது பதவிகளையும் துறப்பதற்கு தயார் என்றும் கூறி இருந்தனர். இதுகுறித்த பதிவை கபில் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் அந்த ட்விட்டர் பதிவை சிறிது நேரத்தில் கபில் நீக்கினார்.
இதற்கு அளிக்கப்பட்டு இருந்த விளக்கத்தில், அவ்வாறு தான் சொல்லவில்லை என்று ராகுல் காந்தி தன்னிடம் தொலைபேசியில் அழைத்து கூறி இருந்ததாகவும், அதனால் நீக்கியதாகவும் விளக்கம் அளித்து இருந்தார். அதே போன்ற விளக்கத்தை தற்போது மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் விடுத்துள்ளார். தனது பதிலில், பாஜகவுடன் கூட்டு வைத்ததாக இன்றைய செயற்குழு கூட்டம் மற்றும் கூடத்திற்கு வெளியே தான் ஒருபோதும் கூறவில்லை என்று ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதையேதான் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலாவும் தெரிவித்து இருந்தார்.
-
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்.. புதிய தலைவர் மாணிக்கம் தாகூர்? ராகுல் காந்தி கிரீன் சிக்னல்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications