Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுலை கண்டித்த டி ராஜா.. சோனியா முன்பே மீட்டிங்கில் வார்னிங் கொடுத்த இ.கம்யூனிஸ்ட் - பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ‛‛ஆர்எஸ்எஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சித்தாந்தங்களை எதிர்த்து நான் போராடி வருகிறேன். அவர்கள் மக்களை பற்றி நினைப்பது இல்லை'' என்று கூறிய ராகுல் காந்தியை சோனியா காந்தி முன்னிலையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி ராஜா கடுமையாக சாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளாவில் இடதுசாரிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார். இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் உள்பட பல கட்சிகள் உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 62 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 17 எம்எல்ஏக்கள் உள்பட இன்னும் சில கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்தில் எம்எல்ஏக்கள் உள்ளனர்.

rahul-gandhi-row-cpi-leader-d-raja-slams-him-for-his-remarks-on-equating-the-left-with-the-rss

எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தம் 42 எம்எல்ஏக்கள் உள்ளன. இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு 22 எம்எல்ஏக்கள் உள்ளனர். மாநிலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. ஆனால் தேசிய அளவிலான இந்தியா' கூட்டணியில் அந்த கட்சிகள் ஓரணியில் உள்ளன.

இந்நிலையில் தான் மறைந்த கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் 2வது ஆண்டு நினைவு நாளையொட்டிய பொதுக்கூட்டம் கேரளாவின் கோட்டயத்தில் நடந்தது. இதில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர், ‛‛நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்த்து சித்தாந்த ரீதியாக களத்திலும், கருத்துகளிலும் போராடி வருகிறேன். அவர்கள் தங்களின் சித்தாந்தங்கள் பற்றி தான் நினைக்கின்றனர். மக்களின் மீதான உணர்வு இல்லை என்பது தான் எனது புகார்.

நீங்கள் அரசியலில் இருந்தால், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உணருங்கள். மக்கள் சொல்வதை கேளுங்கள். ஆனால் இன்றைய இந்திய அரசியலில் உள்ள உண்மையான சோகம் என்னவென்றால், மற்றவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை மிகச் சிலரே உணர்கிறார்கள்'' என விமர்சனம் செய்திருந்தார். இதன்மூலம் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் ஒன்றே. மக்களை பற்றி நினைப்பது இல்லை என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

ஆர்எஸ்எஸ் உடன் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சனம் செய்ததற்கு அந்த கட்சி தலைவர்கள் ராகுல் காந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் நாளை நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து ‛இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் ஆன்லைனில் நடந்தது.

இதில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் பங்கேற்றனர். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், திமுக சார்பில் திருச்சி சிவா, விசிக தலைவர் தொல் திருமாவளவன் உள்பட பல கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மீட்டிங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி ராஜா பங்கேற்றார்.

அப்போது அவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். அதோடு ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சனம் செய்தார். ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் மீட்டிங்கில் பேசிய டி ராஜா, ‛‛ஒருவர் ஆர்எஸ்எஸ் மற்றும் இடதுசாரிகளும் ஒன்று என்று ஒப்பிட்டு பேசி உள்ளார். இதுபோன்ற பேச்சை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியில் குழப்பம் ஏற்படும். குழப்பம் மட்டுமின்றி தேசிய அளவிலான கூட்டணியை இத்தகைய பேச்சுக்கள் உடைக்கும்'' என்று கூறினார். இதன்மூலம் சோனியா காந்தி முன்னிலையில் மகன் ராகுல் காந்தி மீதான அதிருப்தியை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+