ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தம்.. காங்கிரஸ் ட்வீட்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதை அக்கட்சி தலைமை ட்வீட் செய்துள்ளது.
டெல்லியில் கடந்த 1ஆம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலையும் அவசர அவசரமாக தகனம் செய்ய வைக்கப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை ராகுல் காந்தி தனது காரில் உட்கார வைத்து ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

சிறுமியின் அடையாளம்
அந்த ட்வீட்டில் அவர் கூறுகையில் இந்த பெற்றோர் கேட்பதெல்லாம் ஒன்றுதான். சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக இந்த ராகுல் காந்தி துணை நிற்பேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியுலகிற்கு காண்பித்ததாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

டிவிட்டர் நிறுவனம்
இதையடுத்து சம்பந்தப்பட்ட ராகுலின் ட்வீட்டை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்படவில்லை. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து சேவையாற்றுவார். அதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

என்ன ட்வீட்
இது குறித்து அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன் மறுசீரமைப்பிறகு உரிய செயல்முறை பின்பற்றப்படுகிறது. அதுவரை அவர் தனது மற்ற சமூக வலைதளங்களில் உங்களுடன் தொடர்பில் இருப்பார்.

கோரிக்கை
நமது மக்களுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்பார். அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவார். ஜெய் ஹிந்த் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதா இல்லை ஹேக் செய்யப்பட்டதா என்றும் அவரது கணக்கு இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதே என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications