டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பண மதிப்பிழப்புதான்...இந்தியப் பொருளாதாரம்...சரியக் காரணம்...ராகுல் காந்தி விளாசல்!!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் 2016 ஆம் ஆண்டில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதுதான் இந்தியப் பொருளாதாரத்தின் மீது மிகவும் மோசமாக பிரதிபலித்துள்ளது. இதனால், ஏழைகள், விவசாயிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

Recommended Video

    GDP Explained In Tamil | Oneindia Tamil

    கடந்த 2016ஆம் ஆண்டில் மோடி அரசு பண மதிப்பிழப்பு செய்த காரணத்தால் தான் இன்று இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி இந்தியில் தனது வீடியோவை ட்வீட் செய்துள்ளார். மேலும், பணம் இல்லாத இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்று கூறுவதெல்லாம், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறிய வணிகர்கள் இல்லாத இந்தியாவாக மாற்றுவதற்கான திட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Rahul Gandhi says 2016 Note Ban impact has been seen in GDP

    மேலும், ராகுல் காந்தி வெளியிட்டு இருக்கும் இரண்டாவது வீடியோவில், ''நடப்பாண்டின் ஆகஸ்ட் 31ஆம் தேதி நாம் அடைந்து இருக்கும் மோசமான பொருளாதாரத்திற்கு 2016, நவம்பர் 8ஆம் தேதி பகடை உருட்டப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதற்கான மறைமுக காரணமே, கார்பரேட் முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்து, அமைப்புசாரா நிறுவனங்களிடம் இருந்து பணத்தை எடுப்பதுதான். 2016, நவம்பர் 8ஆம் தேதி, இரவு 8 மணிக்கு ரூபாய் நோட்டுக்களை மோடி தடை செய்தார். இதையடுத்து வங்கிகளில் நமது மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

    கருப்பு பணம் ஒழிக்கிறோம் என்று மோடி அரசு கூறியது யாருக்காக? இதனால் சாதாரண மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது. இதனால் யாருக்கும் எந்த பலனும் ஏற்படவில்லை. பயன் அடைந்தவர்கள் எல்லாம் தொழிலதிபர்கள்தான். அமைப்புசாரா தொழில் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை பிடுங்கி பெரிய நிறுவனங்களுக்கு உதவுவதுதான் மோடி அரசாங்கத்தின் குறிக்கோளாக இருந்துள்ளது. பணம் இல்லாத நாடாக பார்க்க வேண்டும் என்று மோடி கூறினார். அதன் அர்த்தமே, அமைப்புசாரா நிறுவனங்களை ஒழித்துக் கட்டுவதுதான்'' என்று தெரிவித்துள்ளார்.

    ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி தொடங்குகிறார்... எழுதி வச்சுக்கங்க.. ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி தொடங்குகிறார்... எழுதி வச்சுக்கங்க.. "கோலாகல"மாக சொல்லும் ஸ்ரீனிவாஸ்!

    கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ராகுல் காந்தி முதல் வீடியோவை வெளியிட்டு இருந்தார் அந்த வீடியோவில், கடந்த ஆறு ஆண்டுகால அமைப்புசாரா நிறுவனங்களின் பாதிப்பு, சரக்கு சேவை வரி, பண மதிப்பிழப்பு, பொது முடக்கத்தால் அமைப்புசாரா தொழில் நிறுவனங்களின் பாதிப்பு ஆகியவை குறித்து பேசி இருந்தார்.

    English summary
    Rahul Gandhi says 2016 Note Ban impact has been seen in GDP affected informal sector badly
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X