திருந்தவே மாட்டாங்களா? காங்கிரஸ் தலைவர்களை திட்டி தீர்த்த ராகுல்.. ஹரியானா தோல்வியால் கடும் கோபம்
டெல்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் 3வது முறையாக பாஜக வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடந்த ஆய்வு கூட்டத்தில் ராகுல் காந்தி கடும் கோபமடைந்து காங்கிரஸ் தலைவர்களை திட்டி தீர்த்தார். அப்போது மீட்டிங் ஹாலில் மயான அமைதி நிலவிய நிலையில் ராகுல் காந்தி கோபமாக வெளிநடப்பு செய்தார். இந்த மீட்டிங்கில் என்ன நடந்தது? ராகுல் காந்தி ஏன் டென்ஷனானார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹரியானாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்தது. இந்நிலையில் தான் அங்குள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி தேர்தல் நடந்தது.

கடந்த 10 ஆண்டு ஆட்சியால் பாஜக மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. இதனால் பாஜக இந்த தேர்தலில் தோற்கும். காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் கூறின. இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் உற்சாகமாக இருந்தன.
அதேவேளையில் பாஜகவினர் மனம் தளரவில்லை. நிச்சயம் பாஜக 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும். மக்களின் ஆதரவு பாஜகவுக்கு தான் இருக்கும் என்று தெரிவித்தனர். இந்த பரபரப்புக்கு இடையே தான் தேர்தலில் பதிவான ஓட்டுகள் கடந்த 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளதால் தனித்து ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் தபால் ஓட்டு எண்ணிக்கை மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையின்போது தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது.
50 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. பாஜக 35 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருந்தது. இதனால் காங்கிரஸ் கட்சியின் உற்சாகமடைந்தனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மேளதாளங்கள் முழங்க அந்த கட்சியினர் வெற்றியை கொண்டாட தொடங்கினர். ஆனால் திடீரென்று டிரெண்ட் மாறியது. காலை 10.30 மணிக்கு மேல் பாஜக முன்னிலை வகிக்க தொடங்கியது. காங்கிரஸ் சரிவை சந்திக்க தொடங்கியது.
இறுதியாக பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. அதோடு 3வது முறையாக ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தியன் தேசிய லோக் தளம் கட்சி 2 தொகுதிகளிலும், 3 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். இந்த தோல்வி காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை வழங்கி உள்ளது.
ஹரியானா வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பாஜகவினர் ஹேக் செய்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. அதோடு தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளது. அதில் 20 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்துவிட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தான் நேற்றைய தினம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் வீட்டில் ஹரியானா தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு மல்லிகார்ஜூன கார்கே தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஹரியானா சட்டசபை தேர்தல் அப்சர்வர்களாக நியமிக்கப்பட்ட அஜய் மாக்கான், அசோக் கெலாட் ஆகியோர் பங்கேற்றனர். இன்னொரு அப்சர்வரான தீபக் பாபரியா ஆன்லைனில் மீட்டிங்கில் பங்கேற்றார். அதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் மீட்டிங்கில் பங்கேற்றனர். இந்த மீட்டிங்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல் ஹரியானாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குமாரி செல்ஜா மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டவர்களும் பங்கேற்கவில்லை. மேலிட நிர்வாகிகள் மட்டுமே இந்த மீட்டிங்கில் பங்கேற்றனர்.
மீட்டிங்கில் அஜய் மாக்கான் பேசுகையில், ‛‛தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுக்குள், தேர்தல் முடிவுக்குள் நிறைய வித்தியாசம் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அது மாறிவிட்டது. எங்கு தவறு நடந்தது என்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். தேர்தல் தோல்விக்கு தேர்தல் ஆணையம், கட்சியின் உள்விவகாரம் என்று பல விஷயங்கள் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க வேண்டும். ஏனென்றால் இப்போது நடந்து இருப்பது மிகப்பெரிய ஏமாற்றம். இதுபற்றி ஒரு நாள் அல்லது வெறும் அரை மணிநேரத்தில் விவாதித்து விட முடியாது'' என்றார்.
அதேபோல் ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளை எடுத்து வைத்தனர். ஆனால் ராகுல் காந்தி எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அதன்பிறகு ராகுல் காந்தி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அவர் ஆக்ரோஷமாக 2 விஷயங்களை பேசினார். ‛‛ஹரியானா தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டி உள்ளது. அதேபோல் ஓட்டு எண்ணிக்கையின்போது எங்கு தவறு நடந்தது என்பது பற்றி விரிவான அறிக்கை எனக்கு வேண்டும்.
அதேபோல் கட்சியினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நடப்பது தேர்தல். இதில் வெற்றி தான் முக்கியம். ஆனால் மாநிலத்தில் உள்ள தலைவர்கள் கட்சியின் வெற்றியை பற்றி சிந்திப்பது இல்லை. மாறாக கட்சியில் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சியையே பற்றி சிந்திக்கின்றனர். எப்போதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தோல்விக்கு குறையாக சொல்ல முடியாது. கட்சியினர் ஒற்றுமையாக கட்சியின் வளர்ச்சிக்கு செயல்பட வேண்டும். இதனை பலமுறை வலியுறுத்தியும் நிர்வாகிகள் மாறாமல் உள்ளனர். இவர்களை என்ன செய்வது? கட்சியை தான் நிர்வாகிகள் முதலில் வெல்ல வைக்க வேண்டும். இந்த தேர்தல் தோல்வி குறித்து உண்மை கண்டறியும் குழு அமைத்து விரிவான அறிக்கை தயாரித்து வழங்க வேண்டும்'' எனக்கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
ராகுல் காந்தி இப்படி பேசியபோது அங்கிருந்த தலைவர்கள் யாரும் குறுக்கீட்டு பேசவில்லை. மீட்டிங் நடந்த அறையே அமைதியாக இருந்தது. ஹரியானாவை பொறுத்தவரை காங்கிரஸில் உள்கட்சி பூசல் என்பது இருந்து வருகிறது. அதாவது முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா மற்றும் மூத்த தலைவர் குமாரி செல்சா - ரன்தீப் சுர்ஜேவாலா தரப்பு இடையே பூசல் இருந்து வருகிறது. இவர்கள் 2 அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தின்போது மேலோட்டமாக பூபேந்தர் சிங் ஹூடா மற்றும் குமாரி செல்சா ஆகியோர் சேர்ந்து பிரசாரம் செய்தாலும் கூட அவர்கள் உள்ளே இருந்த பகையை முற்றிலுமாக மாறவில்லை. இதுதான் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைய மிக முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனை அறிந்து தான் ராகுல் காந்தி நேற்றைய மீட்டிங்கில் பெயரை குறிப்பிடாமல் இருவரையும் சரமாரியாக விளாசி உள்ளார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications