Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கிளம்பி வர்றேன்".. தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு.. பிரியங்காவுடன் சூரத் புறப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 வருட ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி, இன்று மேல்முறையீடு செய்ய உள்ளார்.. இதற்காக, ராகுல் காந்தி சூரத் கிளம்பி உள்ளார்.. சூரத் செசன்ஸ் கோர்ட்டில், அப்பீல் செய்ய உள்ள நிலையில், அவருடன் பிரியங்கா காந்தியும் உடன் சென்றுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில், ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை குறிப்பிட்டு அவர் பேசியிருந்தது மிகுந்த சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

திருடர்களின் பெயர்கள் எல்லாம் ஏன் மோடி என்றே முடிகிறது? என்று ராகுல் கேட்டதுதான், இந்த விவகாரம் முற்றியதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.

 அதிர்ந்த கதர்கள்

அதிர்ந்த கதர்கள்

இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக சூரத் கோர்ட்டில், கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது... இந்த வழக்கை பாஜக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறைத்தண்டனை விதித்தது... எனினும், ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்களுக்கு, ஜாமீன் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தது. இதையடுத்து நாடாளுமன்ற மக்களவை செயலகம் தண்டனையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறிப்பதாக அறிவித்தது.. இதனால், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சி அடைந்தனர்.. உடனடியாக கண்டன பதிவுகளையும் பதிவு செய்தனர்..

 நிச்சயம் நடப்பேன்

நிச்சயம் நடப்பேன்

அப்போது முதல், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை கையில் எடுத்து, அதை நடத்தியும் வருகின்றனர். இதனிடையே, 20 வருடங்களுக்கும் மேலாக டெல்லி துக்ளக் சாலையில் ராகுல் காந்தி வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது... இதற்கு ராகுல் காந்தியே ஒரு பதிலையும் உடனடியாக அளித்திருந்தார்.. அதில், "எனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை ரத்து செய்து கடிதம் அனுப்பியதற்காக தங்களுக்கு நன்றி... பொதுமக்களின் விருப்பத்தின்பேரில் கடந்த 4 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை இதில் செலவிட்டேன்... என்னுடைய உரிமைகளுக்கு எவ்விதமான தீங்கும் ஏற்படாமல் தங்களது கடிதத்தில் அடங்கிய விவரங்களின்படி நிச்சயம் நடப்பேன்'' என்று தெரிவித்திருந்தார்.

 அதானி

அதானி

சமீபகாலமாகவே, பிரதமர் மோடி மற்றும் அதானி தொடர்பு குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார் ராகுல்காந்தி.. நாடாளுமன்றத்திலும் இது குறித்த பிரச்சனையை எழுப்பிய அவர், அதானிக்கு சொந்தமான ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட பணம் குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பினார். இதனை நாடாளுமன்றத்தில் மறுபடியும் பேசவும் ராகுல்காந்தி திட்டமிட்டிருந்த நிலையில்தான், அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டு எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது நாடு முழுக்க அதிர்வலையை உண்டுபண்ணியது.. காங்கிரசுக்கு எதிரான மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட சீமான் வரை, தகுதி நீக்க விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடியிருந்தனர். அவ்வளவு ஏன்.. ஜெர்மனி உட்பட உலக நாடுகளும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன.

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அவதூறு வழக்கில் இதுவரை அதிகபட்ச தண்டனை யாருக்குமே விதிக்கப்படவில்லை. அதிகபட்ச தண்டனை ராகுல்காந்திக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது... எனினும், ராகுல் செய்தது தவறு என்று பாஜக தரப்பு தொடர்ந்து சொல்லி வருகிறது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா இதை பற்றி சொல்லும்போது, ராகுல்காந்தி தண்டிக்கப்பட்டது முழுக்க முழுக்க நீதிமன்ற நடவடிக்கையே, இந்த வழக்கில் இருந்து அவர் நிவாரணம் பெற கோர்ட்டை நாட வேண்டுமே தவிர பிரதமர் மோடியை குற்றம்சாட்டுவதில் எந்த பலனும் இல்லை என்று கூறியுள்ளார்..

 சரியில்லை

சரியில்லை

ஆனால், இந்த அவதூறு வழக்கை தொடர்ந்த பாஜக எம்எல்ஏவுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லாதபோது நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதித்த தண்டனை உகந்ததல்ல என்று காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது.. அத்துடன், மோடி - அதானி விவகாரத்தை பேசக்கூடாது என்பதற்காக, ராகுல்காந்தி மீது தொடுக்கப்பட்டிருக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.. அத்துடன் சத்தியாகிரக போராட்டத்தையும் மேற்கொண்டு வருகிறது. அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்த நிலையில், சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்றைய தினம் முறையிட இருக்கிறார் ராகுல் காந்தி.

 அப்பீல் அப்பீல்

அப்பீல் அப்பீல்

இதில் மாஜிஸ்திரேட் உத்தரவை ரத்து செய்யக்கோரும் ராகுல், வழக்கு விசாரணை முடியும் வரை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோர உள்ளதாக தெரிகிறது... இதுபற்றி அவரது வழக்கறிஞர் கிரிட் பன்வாலா சொல்லும்போது, "ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக சூரத் செசன்ஸ் கோர்ட்டுக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு வந்து சேருகிறார்" என்று கூறியிருந்தார்.. ராகுல் காந்தி சூரத் வந்து சேருகிறபோது, அங்கு கட்சியின் மூத்த தலைவர்கள் இருப்பார்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன... 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அவர் சூரத் செசன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார்.

 எம்பி பதவி

எம்பி பதவி

ராகுல் காந்தி மீதான தண்டனைக்கும். தண்டனை தீர்ப்புக்கும் அப்பீல் கோர்ட்டு தடை கொடுக்காவிட்டால், அவர் 8 ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அத்துடன்அடுத்தடுத்த மேல்முறையீடுகளுக்கு செல்ல வேண்டியிருக்கும்.. ஒருவேளை அப்பீல் கோர்ட்டில், விசாரணை நீதிமன்றத்தின் தண்டனை தீர்ப்புக்கும், தண்டனைக்கும் தடை வந்து விட்டால், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பும் நிறுத்தப்படும், அவர் மறுபடியும் மக்களவைக்கு செல்ல முடியும். அதனால், இப்போது எல்லோரின் பார்வையும் சூரத் செசன்ஸ் கோர்ட்டின் மீது படிந்துள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+