சஸ்பென்ஸ் ஓவர்.. மீண்டும் வயநாடு தொகுதியை டிக் அடித்த ராகுல் காந்தி.. அமேதி என்னாச்சு? பரபர பின்னணி!
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் முதற்கட்டமாக 39 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் களம் இறங்குகிறார். அமேதி லோக்சபா தொகுதியை அவர் தேர்வு செய்யாமல் வயநாடை செலக்ட் செய்ததன் பின்னணி என்னவென்று இங்கே பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த வாரம் மத்தியில் ஆளும் பாஜக 195 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன.

அதேபோல், அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இராணி போட்டியிடுவார் என்றும் பாஜக அறிவித்தது. பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னமும் முழுமை அடையாத நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியலை அளித்து நெருக்கடி கொடுக்க திட்டமிட்டது.
இதனால், காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டு வருகிறது. அதன்படி தான் இன்று 39 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
தற்போது வயநாடு தொகுதி எம்பியாக இருக்கும் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் போட்டியிட இருப்பதாக பேச்சு எழுந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் ராகுல் காந்தி, பாஜகவின் ஸ்மிரிதி இராணியிடம் தோல்வி அடைந்தார். வயநாடு தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி செல்வாக்கு மிகுந்த தொகுதியாக உள்ளது.
இதனால், safe Zone என்ற அடிப்படையில் ராகுல் காந்தி முதலில் வயநாடு தொகுதிக்கு டிக் அடித்ததாக தெரிகிறது. எனினும், 2-வது தொகுதியாக அமேதியிலும் ராகுல் காந்தி போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது. ராகுல் காந்தி அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்ததில் இருந்து அதாவது 2004 முதல் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வந்தார். மூன்று முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் தோல்வியை தழுவினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications