இனி எப்படி குப்பையா ஆக்குறீங்கன்னு பார்க்கலாம்.. வந்தே பாரத் ரயிலில் புது முயற்சி.. ரயில்வே அதிரடி!
டெல்லி: வந்தே பாரத் ரயிலில் பயணிகள் தாங்கள் பயன்படுத்திய பொருட்களை அப்படியே வீசி சென்றதில் ரயில் பெட்டி முழுவதும் குப்பைகள் சிதறிக்கிடந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. விமானத்திற்கு நிகரான சொகுசு வசதி கொண்ட ரயில்களில் கூட பயணிகள் இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு முடிவு கட்ட புதிய முயற்சியை ரயில்வே எடுத்துள்ளது.
இந்திய ரயில்வே துறையை மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. நாட்டில் பெருமளவு மக்கள் தங்களின் தொலை தூர பயணங்களுக்கு ரயில்களை மட்டுமே நம்பியிருப்பதால், பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு வசதிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
மலிவான கட்டணம் மட்டும் இன்றி பாதுகாப்பான பயணமும் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரயில் பயணத்தை பெரிதும் விரும்புகின்றனர்.

8 வந்தே பாரத் ரயில்கள்
பயணிகளை மேலும் கவரும் வகையில் வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. டெல்லி - வாரணாசி, டெல்லி - காத்ரா, குஜராத் மாநிலம் காந்திநகர் - மும்பை, இமாச்சலப் பிரதேசத்தின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி, கர்நாடகாவின் மைசூரு - சென்னை, விசாகப்பட்டினம் - செகந்திராபாத் உள்பட 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயிலின் உள்புறம், வெளிப்புற தோற்றம்
பல்வேறு சொகுசு வசதிகளுடன் கூடிய இந்த வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் உள்ள வந்தே பாரத் ரயிலின் உள்புறம் மற்றும் வெளிப்புற தோற்றமும் ஆடம்பரமாக மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் ரயில் பெட்டிகளுக்குள் பயணிகள் தாங்கள் உபயோகப்படுத்திய பொருட்களை அப்படியே வீசி சென்றது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.

குப்பைகளாக காட்சியளித்த ரயில் பெட்டிகள்
காலி வாட்டர் பாட்டில்கள், சாப்பிட்டு விட்டு வீசப்பட்ட காலி உணவு பொட்டலங்கள், பிளஸ்டிக் கேரி பேக்குகள் என பெட்டியில் குப்பைகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இந்தக் குப்பைகளை அகற்றும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டு இருந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவின. வந்தே பாரத் ரயில் பயணிகளின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர். விமானத்திற்கு இணையான சொகுசு வசதிகளை வழங்கும் வந்தே பாரத் ரயிலை தூய்மையாக பராமரிக்க பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் ரயில்வே ஊழியர்கள் வைக்கும் கோரிக்கையாக இருந்தது.

விமானங்களில் பின்பற்றப்படும் நடைமுறை
இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலில் குப்பைகளை மாற்று வழியில் அகற்றுவதற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி விமானங்களில் பின்பற்றப்படும் நடைமுறையை போல பயணிகளின் இருக்கைக்கே வந்து காலி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை ரயில்வே ஊழியர்கள் வந்து சேகரிக்கும் வகையில் புதிய முயற்சியை ரயில்வே கொண்டு வந்துள்ளது. ரயில்வேயின் இந்த புதிய முயசிக்கு பயணிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications