தூக்கியடிக்கப்பட்ட ரயில்வே அதிகாரி! மோடி செல்ஃபி பூத் செலவுகளை வெளியிட்டதால் நெருக்கடியா? சலசலப்பு
டெல்லி: ரயில் நிலையங்களில் உள்ள பிரதமர் மோடியின் செல்ஃபி பூத்களுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்த விவரங்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த தகவலை வெளியிட்ட மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அதிடிரயாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
உலகின் மிகவும் பழமையான ரயில் சேவைகளில் இந்தியன் ரயில்வேயும் ஒன்று. ஆனால் கடந்த சில நாட்களாக ரயில்வே துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மூத்த குடி மக்களுக்கான கட்டண சலுகை நிறுத்தப்பட்டதை எதிர்த்து தற்போது வரை எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இப்படி இருக்கையில்தான் புதிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் 3டி உருவம் பொறித்த செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்படும் என்று ரயில்வே துறை கூறியிருந்தது.

முதல்கட்டமாக மும்பை, புசாவல், நாக்பூர், புனே, சோலாப்பூர் ஆகிய ஐந்து ரயில்வே மண்டலங்களில் உள்ள 50 ரயில் நிலையங்களில் இந்த செல்ஃபி பாயிண்டுகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் எழுந்தது. இந்திய ரயில்வேயில் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் எவ்வளவோ இருக்கும்போது செல்ஃபி பாயிண்ட்களுக்கு ஏன் மக்களின் வரி பணத்தை செலவழிக்க வேண்டும் என்று விமர்சித்திருந்தனர். இந்நிலையில்தான் செல்ஃபி பாயிண்டுகள் அமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரியான அஜய் போஸ் என்பவர்தான் ஆர்டிஐயின் கீழ் இந்த தகவலை கேட்டு பெற்றார். இந்த கேள்விக்கு மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவ்ராஜ் மனஸ்புரே என்பவர் பதிலளித்திருந்தார். அதாவது "மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், கல்யாண், நாக்பூர், பெதுல் உள்ளிட்ட 30 A வகை ரயில் நிலையங்களில் தற்காலிக செல்ஃபி பாயிண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஒவ்வொரு செல்ஃபி பாயிண்டுக்கும் ரூ.1.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல கர்ஜத், கசரா, லத்தூர், கோபர்கான் போன்ற 20 C வகை ரயில் நிலையங்களில் நிரந்தரமாக செல்ஃபி பாயிண்டுகள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு நிரந்தர செல்ஃபி பாயிண்டுகள் அமைக்க ரூ.6.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர டேராடூன், அம்பாலா, புது தில்லி, அமிர்தசரஸ், அயோத்தி, சண்டிகர் ஆகிய இடங்களில் ஒவ்வொரு நிலையத்திலும் மூன்று செல்ஃபி பாயிண்டுகள் நிறுவப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர், திருவாரூர் சந்திப்பு, வேலூர் கன்டோன்மென்ட் உள்ளிட்ட 11 ரயில் நிலையங்களில் செல்ஃபி பாயிண்டுகள் நிறுவப்பட உள்ளன" என்று பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த நிதி ஒதுக்கீடு விவரங்கள் எதிர்க்கட்சியினரின் விமர்சனத்தை மேலும் கூர்மைப்படுத்தியது. அதாவது, செல்ஃபி பாயிண்டுகளுக்காக மக்களின் வரிப்பணம் வீணாக செலவழிக்கப்படுகிறது என்றும், இது மலிவான தேர்தல் ஆதாயத்திற்கான பணி என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே விமர்சித்திருந்தார்.
இந்தியா கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் இதே விமர்சனத்தை முன் வைத்தன. இப்படி அதிக விமர்சனங்கள் எழுந்த நிலையில், செல்ஃபி பூத்களுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்த விவரங்களை வெளியிட்ட மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவ்ராஜ் மனஸ்புரே அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், ஆர்டிஐ கேள்விக்கு மனஸ்புரே பதிலளித்ததற்கும், அவரது பணியிட மாற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என ரயில்வே அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications