ஒரே நாளில் கோடீஸ்வரர்.. ராஜஸ்தானில் அரசு ஊழியருக்கு அடித்த யோகம்! அதிர்ஷ்டத்தை பாருங்க
டெல்லி: பல ஆண்டுகளாக பணக் கஷ்டத்தில் தவித்த ராஜஸ்தானை சேர்ந்த அரசு ஊழியருக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு அடித்துள்ளது. நமக்கெல்லாம் எங்கே லாட்டரி பரிசு அடிக்க போகிறது என நினைத்துக்கொண்டு இருந்தவருக்கு, லாட்டரி குலுக்கலில் இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. இதனால் அவர் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றுள்ளார்.
தமிழகத்தில் லாட்டரிக்கு தடை உள்ளது. பல ஆயிரம் குடும்பங்கள் லாட்டரியால் பெரும் பணத்தை இழந்ததால் இந்த முடிவை அரசு எடுத்தது. 2004 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் லாட்டரிக்கு தடை இருக்கிறது. எனினும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி இருக்கிறது.

கேரளா, சிக்கிம், அருணாசல பிரதேசம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரிக்கு அனுமதி இருக்கிறது. லாட்டரியில் அவ்வப்போது திடீரென பல கோடிகளை வென்றவர் பற்றிய சுவாரசிய கதைகள் அவ்வப்போது இணையதளத்தில் வைரலாகும். அந்த வகையில் தான் தற்போது பஞ்சாப் லாட்டரியில் ராஜஸ்தான் அரசு ஊழியருக்கு 1 கோடி ரூபாய் பரிசாக அடித்துள்ளது. பெரும் பணக்கஷ்டத்தில் இருந்து வந்தவருக்கு அதிர்ஷ்டம் எப்படி கொட்டியுள்ளது என்ற விவரங்களை பார்க்கலாம்..
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அனில் குமார். ராஜஸ்தானில் அரசு அலுவலகம் ஒன்றில் சாதாரண கிளர்க் ஆக பணி புரிந்து வரும் அனில் குமார் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறி வந்துள்ளார். ஒரு பக்கம் கடன் தொல்லை, இன்னொரு பக்கம் வரவுக்கு மீறிய செலவு என கஷ்டத்தில் புலம்பி வந்த இவர், பஞ்சாப் மாநிலம் செல்ல வேண்டியிருந்துள்ளது. பஞ்சாபில் உள்ள லூதியானா சென்ற அனில் குமாருக்கு அங்குள்ள கடை ஒன்றில் லாட்டரி டிக்கெட்டை பார்த்து இருக்கிறார்.
கடும் பணக்கஷ்டத்தில் இருக்கும் நிலையில் அதிர்ஷ்டம் கை கொடுக்குமா? என்ற ஆசையில் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். லாட்டரியை வாங்கிய போதும், நமக்கெல்லாம் எங்கே அடிக்க போகிறது என நினைத்துக்கொண்டு இருந்தவருக்கு, லாட்டரி குலுக்கல் நாளில் இன்ப அதிர்ச்சி காத்திருந்துள்ளது. 10 கோடி ரூபாய் முதல் பரிசு கொண்ட லாட்டரியை வாங்கிய அனில் குமாருக்கு ரூ. 1 கோடி விழுந்துள்ளது.
முதல் பரிசு அடிக்குமா? என எதிபார்த்தவருக்கு கொஞ்சம் ஏமாற்றம் கிடைத்தாலும் 1 கோடி விழுந்ததால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார். ஒரே நாளில் அவரது தலைவிதியே மாறிவிட்டதால் சந்தோஷத்தில் இருந்து மீளாத அனில் குமார், இந்த பணத்தை வைத்து தனது கடன்கள் அனைத்தையும் அடைத்துவிடுவேன் எனவும் குழந்தைகளின் கல்வி செலவுக்கும் இந்த தொகையை பயன்படுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications