சச்சின் பைலட் கோஷ்டி மீது தகுதி நீக்க நடவடிக்கை- ராஜஸ்தான் சபாநாயகர் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் மனு
டெல்லி: சச்சின் பைலட் உள்ளிட்ட 18 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் சபாநாயகர் சி.பி. ஜோஷி மேல்முறையீடு செய்துள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். அவருக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்களும் கலகக் குரல் எழுப்பினர். ஆனால் சச்சின் பைலட் கோஷ்டியால் எதையும் சாதிக்க முடியவில்லை.

சச்சின் பைலட், அவரது ஆதரவு அமைச்சர்கள் இருவர் பதவி பறிக்கப்பட்டது. அத்துடன் சச்சின் பைலட் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க செய்வது என சபாநாயகர் ஜோஷி முடிவு செய்தார். இது தொடர்பாக அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பினார்.
ஆனால் இந்த விளக்க நோட்டீஸுக்கு எதிராக பைலட் கோஷ்டி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வரும் 24-ந் தேதி வரை பைலட் கோஷ்டி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க கூடாது என சபாநாயகருக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் சபாநாயகர் ஜோஷி மேல்முறையீடு செய்துள்ளார். சபாநாயர் ஜோஷியின் சார்பாக மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கபில்சிபல் ஆஜராகி இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் சச்சின் பைலட் ஒரு கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். சபாநாயகரின் மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து இந்த கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார் பைலட்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications