Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜ்யசபா தேர்தல் 2022: மல்லுக்கட்டுக்கு இடையே 8 இடங்களில் வென்ற பாஜக, காங்கிரஸ் கட்சி 5ல் வெற்றி

விறுவிறுப்பாக நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் பாஜக 8 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் வென்றுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குதிரை பேரம்..கட்சி மாறி வாக்களித்தது என விறுவிறுப்பாக நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் பாஜக 8 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் வென்றுள்ளது. ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய 16 இடங்களுக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.

காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, பீகார், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்கண்ட் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே 41 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய 16 இடங்களுக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை அதிகாலையில் அறிவிக்கப்பட்டன. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நான்கு இடங்களில் 3 இடங்களை கைப்பற்றியது. கர்நாடகாவில் பாஜக மூன்று இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. விதிகளை மீறியதாகக் கூறி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை தாமதமாக நடைபெற்றதால் முடிவுகளும் தாமதமாக அறிவிக்கப்பட்டன.

 ராஜஸ்தானில் காங்கிரஸ்

ராஜஸ்தானில் காங்கிரஸ்

ராஜஸ்தானில் நடைபெற்ற ராஜ்யபா தேர்தலில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சியம், 1 இடத்தை பாஜகவும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் பாஜகவின் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றுள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தோல்வியடைந்துள்ளார். ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு, குறிப்பாக முதல்வர் அசோக் கெலாட்டுக்கு பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

கர்நாடகா கலாட்டா

கர்நாடகா கலாட்டா

கர்நாடகா மாநிலத்தில் பாஜகவின் நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், லெஹர் சிங் சிரோயா ஆகியோர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றார். ஜேடி(எஸ்) எம்எல்ஏ ஸ்ரீனிவாஸ் கவுடா, அக்கட்சியின் உத்தரவை வெளிப்படையாகவே மீறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸை நேசித்ததால் தான் காங்கிரஸுக்கு வாக்களித்ததாகவும், விரைவில் அணி மாறப்போவதாகவும் தெரிவித்தார். மற்றொரு ஜேடி(எஸ்) எம்எம்ஏ பாஜகவுக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது. இந்த முடிவுகள் கர்நாடகாவில் 2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜேடி(எஸ்)-காங்கிரஸ் உறவை மோசமாக பாதிக்கும்.

ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி

ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி

ஹரியானாவில் புகார்கள் காரணமாக, பல மணி நேரத்திற்கும் மேலாக தாமதத்திற்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதையடுத்து நள்ளிரவுக்கு மேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலத்தில் உள்ள இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மற்றும் அதை ஆதரிக்கும் சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினர். பாஜக ஒரு இடத்தையும், அதை ஆதரித்த சுயேச்சை வேட்பாளர் மற்றொரு இடத்தையும் கைப்பற்றினர். ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை.

வாக்கு எண்ணிக்கை 8 மணி நேர தாமதம்

வாக்கு எண்ணிக்கை 8 மணி நேர தாமதம்

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாலை 5 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. வெள்ளிக்கிழமை, ஆனால் மாநிலத்தின் ஆளும் கூட்டணியான எம்.வி.ஏ.வின் மூன்று எம்.எல்.ஏ.க்கள் விதிகளை மீறியதாக பாஜக தேர்தல் ஆணையத்தை அணுகியதால் அதை ஏற்க முடியவில்லை. இதற்கிடையில், எம்.வி.வி கட்சியும் இதேபோன்ற புகாரை பாஜக மீது தாக்கல் செய்தது. சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 8 மணி நேரம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

பாஜக வெற்றிக்கணக்கு

பாஜக வெற்றிக்கணக்கு

இறுதியில் 8 மணி நேரம் தாமதமாக வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக தரப்பில் மூன்றாவது வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த தனஞ்சே மகாதிக் சிவசேனாவின் சஞ்சய் பவாரை தோற்கடித்து வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளருக்கு எதிர்பாராத விதமாக 10 வாக்குகள் அதிகமாக கிடைத்தது. இது தவிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் பட்டேல், காங்கிரஸ் கட்சியின் இம்ரான், சிவசேனாவின் சஞ்சய் ராவத், பாஜக சார்பில் பியூஸ் கோயல், அனில் போண்டே ஆகியோர் வெற்றி பெற்றனர். இத்தேர்தல் முடிவுகள் சிவசேனா கூட்டணிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+