ராகுல்காந்திக்கு ராமர் அறங்காவலர்கள் ஆதரவு..யோகியின் மாநிலத்தில் பருவநிலை மாற்றம்..ஜெய்ராம் ரமேஷ்
டெல்லி: ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு ராமர் கோயில் அறக்கட்டளை தலைவர்கள் ஆதரவு தெரிவித்து இருப்பது பா.ஜ.க.வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமர் கோயில் அறங்காவலர்கள் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ஆதரித்ததையடுத்து, காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், யோகியின் மாநிலத்தில் பருவநிலை மாற்றத்திற்கான அறிகுறிகள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த ராகுல்காந்தி முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக தமிழகத்தில் கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். பல மாநிலங்களில் ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் நடைபெற்றுள்ளது.
ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது உத்தர பிரதேசத்தில் நடந்து வருகிறது. ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர்கள் ராகுல் காந்தியை பாராட்டினர். ராமர் கோயில் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், நாட்டில் கால் நடையாக நடந்து வரும் இளைஞனுக்கு நன்றி. அவரது நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். அதில் தவறேதும் இல்லை. நான் ஆர்.எஸ்.எஸ். தொண்டன், ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கண்டித்ததில்லை என தெரிவித்தார்.

நாட்டின் ஒற்றுமை, வலிமை, நல்லிணக்கத்துக்காக நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுலை கடவுள் ராமர் ஆசிர்வதிக்க பிரார்த்திக்கிறேன் என்று ராமர் கோயில் அறக்கட்டளையின் மற்றொரு மூத்த அறங்காவலரான கோவிந்த் கிரி கூறியுள்ளார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்துவது சிறந்த முழக்கம் என்று தெரிவித்தார். ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு ராமர் கோயில் அறக்கட்டளை தலைவர்கள் ஆதரவு தெரிவித்து இருப்பது பாஜகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமர் கோயில் அறங்காவலர்கள் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ஆதரித்ததையடுத்து, காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் உற்சாகமாக பதிவிட்டுள்ளார், யோகியின் மாநிலத்தில் பருவநிலை மாற்றத்திற்கான அறிகுறிகள்?. என்று பதிவிட்டுள்ளார். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை வரவேற்று அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகரின் கடிதம் மற்றும் சம்பத் ராய் போன்ற வி.எச்.பி. தலைவர்கள் ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்ததையடுத்து, இன்று பாக்பத்தின் பாரௌலியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து உற்சாகமாக கை அசைத்து யாத்திரிகள் வரவேற்கப்பட்டனர் என பதிவு செய்து இருந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications