"நாட்டுக்காக உயிரை கொடுக்க தயார்.. காலையிலேயே சண்டிகரில் குவிந்த இளைஞர்கள், இளம்பெண்கள்! பரபரப்பு
சண்டிகர்: பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
ராணுவத்தில் தன்னார்வலராக பணியாற்ற 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் தேவை என அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலையில் திரண்டுள்ளனர். இன்று இரவு 10.30 மணிக்கு இதற்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழித்து ஒழிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை தொடுத்து வருகிறது.
நம் ராணுவத்துக்கான ஆதரவு சேவைகளை அளிக்கும் பகுதி நேர தன்னார்வலர்களை உறுப்பினர்களாக கொண்ட ராணுவ ரிசர்வ் படையாக, 'டெரிடோரியல் ஆர்மி' எனப்படும் பிராந்திய ராணுவம் செயல்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிராந்திய ராணுவத்தினரை உதவிக்கு அழைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான முழு அதிகாரமும் நம் ராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் குவிந்துள்ளனர். சண்டிகர் துணை ஆணையர் நிஷாந்த் குமார் நேற்று இரவு தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "18 வயதுக்கு மேற்பட்டோர் தன்னார்வலர்களாக சிவில் பாதுகாப்பு படையில் சேருமாறும், ஆர்வமுள்ளவர்கள் இன்று காலை 10 மணிக்கு தாகூர் தியேட்டருக்கு வரலாம்" என்றும் பதிவிட்டிருந்தார்.
#WATCH | Huge lines seen in Chandigarh when local announcements were made for volunteers to aid in the assistance. pic.twitter.com/Q7YXWRg50J
— ANI (@ANI) May 10, 2025
தன்னார்வலர்கள் தேவை என்ற அறிவிப்பை தொடர்ந்து ''ராணுவத்திற்கு உதவ தயார்'' என முழக்கமிட்டு சண்டிகரில் இளைஞர்கள், இளம்பெண்கள் என ஏராளமானோர் குவிந்து உள்ளனர். காலை 6 மணி முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் கடும் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது.
''நாங்கள் நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறோம். ராணுவத்திற்கு உதவியாக, தன்னார்வலர்களாக பணியாற்ற தயாராக இருக்கிறோம்'' என குவிந்த இளைஞர்களில் ஒருவர் தெரிவித்தார்.
உள்ளூர்வாசியான கரண் சோப்ரா என்பவர் கூறுகையில், "இந்தியாவுக்காக என் உயிரைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். நாங்கள் படிவத்தை நிரப்பி தாக்கல் செய்துவிட்டோம்; எங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்று தெரிவித்தார்.
சண்டிகரில் இளைஞர்கள் சாலையில் திரண்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையில் நீண்ட நேரமாக காத்திருந்து வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். கூடியிருந்த இளைஞர்கள் தேசத்திற்காக பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கிறோம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications