டெல்லி செங்கோட்டை தாக்குதல் தீவிரவாதி முகமது ஆரிப் தூக்கு தண்டனை உறுதி- சீராய்வு மனு டிஸ்மிஸ்!
டெல்லி: நாட்டை அதிரவைத்த டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதி முகமது ஆரிப் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனால் தீவிரவாதி முகமது ஆரிப் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டு டிசமப்ர் 22-ந் தேதியன்று இரவு 9 மணியளவில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் டெல்லி செங்கோட்டைக்குள் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்புக்காக நின்ற ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இத்தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர்; பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து லஷ்கர் தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த வழக்கில் 2005-ம் ஆண்டு முகமது ஆரிப் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் முகமது ஆரிப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனைய 2007-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முகமது ஆரிப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 2011-ல் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
பின்னர் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை முகமது ஆரிப் தாக்கல் செய்தார். இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. பின்னர் முகமது ஆரிப்பின் சீராய்வு மனுவை தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான பெஞ்ச் டிஸ்மிஸ் செய்தது. இதனால் முகமது ஆரிப்புக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications