டெல்லி பவுத்த மத மாற்ற சர்ச்சை விவகாரம்: அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் ராஜினாமா
டெல்லி: டெல்லியில் இந்துக்களை பவுத்த மதத்துக்கு மதம் மாற்றிய சர்ச்சையில் அடிபட்டதால் அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
விஜயதசமி நாளன்று டெல்லி டாக்டர் அம்பேத்கர் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் இந்துமதத்தை விட்டு வெளியேறி பவுத்த மதத்தை தழுவினர். இந்த நிகழ்ச்சியில் டெல்லி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமும் பங்கேற்றார்.

மேலும் நிகழ்ச்சியில் உறுதி மொழியை வாசித்த ராஜேந்திர பால் கவுதம், இந்து கடவுள்களை தாம் நம்புவதில்லை; இந்து கடவுள்களை வணங்குவதில்லை என உறுதி மொழி வாசித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குஜராத் கல்வி அமைச்சர் ஜிது வகானி கூறுகையில் இந்து தெய்வங்களை ஆம் ஆத்மி
அமைச்சர் அவமதித்துவிட்டார் என கூறியிருந்தார். குஜராத் சட்டசபை தேர்தலிலும் இது பெரிய விவகாரமாக எதிரொலித்தது. குஜராத் தேர்தல் களத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்பட்ட முறையில் அனைத்து தெய்வங்களையும் மதிக்கிறேன். எந்த தெய்வத்தையும் அவமதிக்க வேண்டும் என கனவில் கூட நினைத்தது இல்லை என விளக்கம் அளித்தார் ராஜேந்திர பால் கவுதம். அத்துடன் அனைவரின் நம்பிக்கையையும் நான் மதிக்கிறேன். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பணவீக்கம் மற்றும் சமூக சமத்துவம் ஆகியவை பற்றியே நான் பேசினேன். ஆனால், பாஜகவினரோ எனக்கு எதிராக பொய்பிரச்சாரங்களை பரப்புகின்றனர். பாஜகவினர் செயல்கள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. பாஜகவின் இந்த போலி பிரசாரங்களால் வருத்தம் அடைந்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் கூறியிருந்தார். தற்போது அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications