ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அடிக்கும் ”மெகா ஜாக்பாட்”.. மத்திய ரயில்வே அமைச்சகம் எடுத்த முடிவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அனைத்து மண்டலங்களுக்கும் மத்திய ரயில்வே துறை சுற்றறிக்கை ஒன்றை கடந்த 20 ஆம் தேதி அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையின் படி ரயில்வேயில் ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணிக்கு அமர்த்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் முன்பு வகித்த பணி இடங்களுக்கோ அல்லது அதற்கு கீழ் உள்ள பணி இடங்களுக்கோ ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியமர்த்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிக தொழிலாளர்களை கொண்ட அரசு நிறுவனமாக ரயில்வே உள்ளது. உலக அளவில் 3 வது பெரிய ரயில்வே என்ற அந்தஸ்தும் ரயில்வேக்கு உண்டு. இந்திய ரயில்வேயில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வேயில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மேற்கோள்கிறது.

retired-railway-staff-to-return-amid-surge-in-train-service-demand

ஓய்வுபெற்ற பணியாளர்கள்

ரயில்வே துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப இந்த உரிய அறிவிப்புகள் வெளியிட்டு ஆட்சேர்ப்பு நடவடிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்வுகளை நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்கள். இத்தகைய சூழலில்தான், பயணிகளின் பாதுகாப்பு, ரயில் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கவனிக்கும் முக்கிய துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை ஓய்வுபெற்ற ரயில்வே பணியாளர்கள் மூலம் நிரப்புவதற்கு ரயில்வே வாரியம் முடிவு எடுத்துள்ளது.

எனவே 1 முதல் 9 வரையிலான ஊதிய ஸ்லாப்பிற்குள் வரும் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் கடந்த 20 ஆம் தேதி மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில், 'தங்கள் மண்டலத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் அவர்கள் வகித்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தால், அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் முன்பு வகித்த பணி இடங்களுக்கோ அல்லது அதற்கு கீழ் உள்ள பணி இடங்களுக்கோ ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியமர்த்தலாம்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரயில்வே விளக்கம்

இந்த சுற்றறிக்கையை தொடர்ந்து, ரயில்வே தண்டவாள பராமரிப்பு, மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பணி இடங்களை நிரப்புவதற்கான அதிகாரம் ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ரயில்வே தலைமை அலுவலகங்களில் உள்ள காலிப்பணி இடங்களில் ஓய்வுபெற்ற ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம் பொது மேலாளர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

ரயில்வேயில் நிலவும் பணியாளர்கள் தேவையை பூர்த்தி செய்து, ரயில் சேவைகளின் தரத்தை உயர்த்த ஓய்வுபெற்ற பணியாளர்கள் மீண்டும் அதே பணியில் தற்காலிகமாக நியமிக்கப்படுவது உதவும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்களுக்கு புதிய ஆட்கள் தேர்வு செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெறும் என்றும் ரெயில்வே தேர்வு வாரியம் சார்பில் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது.

67,748 காலிப்பணியிடங்கள்

சமீபத்தில் தொடர் ரெயில் விபத்துகள் நடந்த நிலையில், அனுபவமிக்க ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் திட்டத்தை ரயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உத்தரவு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்' போன்று அமைந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு முன்பு வழங்கிய சம்பளம் வழங்கப்படுமா? அல்லது புதிய சம்பளம் வழங்கப்படுமா?, சலுகைகள் மீண்டும் கிடைக்குமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.

ரயில்வே வேலைகளுக்காக பல லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்திருக்க கூடிய சூழலில், ஓய்வு பெற்ற பணியாளர்களை கொண்டு மீண்டும் பணியிடத்தை நிரப்புவதற்கு பதிலாக புதிய பணியாளர்களை தேர்வு செய்யலாம் என்பது தேர்வர்களின் கருத்தாக உள்ளது. அதே வேளையில், இந்தியன் ரயில்வேயில் கடந்த 2014-15 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரை 5 லட்சத்து 2 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 180 டெக்னீசியன் உள்பட 67 ஆயிரத்து 748 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+