டாலரை அடித்து நொறுக்கும் R-பிளாக்! அமெரிக்க ஆதிக்கத்தை முடிக்க.. இந்தியாவின் பங்கு மிக முக்கியம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி

BRICS US tariff
: ஆங்கிலத்தில் 'மோனோபோலி' என்கிற வார்த்தை உண்டு. கல்யாண வீட்டு போனாலும் சரி, எழவு வீட்டுக்கு போனாலும் சரி மாலை எனக்குதான் என்கிற கணக்காக செயல்படும் நிறுவனங்களைதான் இப்படி சொல்வார்கள். நிறுவனங்களை தாண்டி ஒரு நாடே இப்படி செயல்படுகிறது எனில், அது அமெரிக்காதான். எனவே இந்த ஆபத்தான போக்கை முடிவுக்கு கொண்டுவர, பிரிக்ஸ் நாடுகள் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.

சரி ஏன் அமெரிக்காவை 'மோனோபோலி' என அழைக்கிறார்கள்? ஓர் உதாரணத்தை பார்ப்போம். நாம் அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும் எனில், அந்நாட்டு கரன்சியான டாலரில்தான் வாங்க முடியும். அதேபோல அரபு நாடுகளில் பெட்ரோலை வாங்குவதெனில்? தினார் உள்ளிட்ட அரபு நாட்டு கரன்சிகளில்தானே வாங்குவோம்? ஆனால் அரபு நாடுகள் தங்கள் சொந்த கரன்சியில் பெட்ரோலை விற்பதில்லை. மாறாக அமெரிக்க டாலரில் விற்கிறது.

டாலர் ஆதிக்கம்

சரி அங்கிட்டுதான் அந்த பிரச்சனை என, ஆஸ்திரேலியாவிலிருந்து முக்கிய கனிமங்களை இறக்குமதி செய்யலாம் என்று போனால், அந்த நாடும் அமெரிக்க டாலர் கொடுத்தால்தான் பொருட்களை விற்பேன் என்று சொல்கிறது. இப்படி பல நாடுகள் டாலரில் மட்டுமே வர்த்தகம் செய்கின்றன. தங்கள் சொந்த நாட்டு கரன்சியை விட ஏன் இந்த நாடுகள் டாலரில் வர்த்தகம் செய்கின்றன? ஏனெனில் டாலரின் மதிப்பு அதிகம். அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இதைத்தான் மோனோபோலி என்று சொல்லுகிறோம்.

அமெரிக்காவின் மோனோபோலி

சரி இந்த மோனோபோலியை முடிவுக்கு கொண்டுவருவது எப்படி? பிரிக்ஸ் நாடுகள் இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருக்கின்றன. அதாவது, பிரிக்ஸ் நாடுகள் தங்கள் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய தொடங்கியுள்ளன. பிரிக்ஸ் நாடுகள் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேரையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40%-க்கும் அதிகமான பங்கையும் கொண்டுள்ளது. இப்படி இருக்கையில் சொந்த கரன்சியில் வர்த்தகம் என்பது R-பிளாக்கை உருவாக்கியிருக்கிறது.

அதாவது, ரஷ்ய ரூபிள், இந்திய ரூபாய், சீன ரென்மின்பி, பிரேசில் ரியால், தென்னாப்பிரிக்க ராண்ட், ஈரான் ரியால் போன்ற 'R' என்ற எழுத்தில் தொடங்கும் கரன்சியில் வர்த்தகம் செய்யப்படுவதைத்தான் R-பிளாக் என்று சொல்கிறார்கள்.

R-பிளாக்

சரி இந்த 'R-பிளாக்' அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமா? என்று கேட்டால் அதற்கு இல்லை என்றே பதில் கிடைக்கிறது. இது குறித்து சர்வதேச நிதி நிபுணர்கள் கூறுகையில், "R-பிளாக் உடனடியாக டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவராமல் இருக்கலாம். ஆனால், நிச்சயம் மோனோபோலிக்கு எதிராக செயல்பட முடியும். சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு போட்டியாக R-பிளாக் வளர்ந்திருக்கிறது.

இந்தியாவின் முக்கியத்துவம்

அமெரிக்க டாலர் அந்நியச் செலாவணி சந்தையில் வலிமையான நாணயமாக இருந்தாலும், BRICS அதற்கு இணையாக ஒரு அமைப்பை உருவாக்கி அதன் ஏகபோக உரிமையை பலவீனப்படுத்துகிறது. 'R-பிளாக்' இன்னும் டாலரை கவிழ்க்காமல் இருக்கலாம், ஆனால் இது உலகை மிகவும் சீரான மற்றும் பல துருவ நாணய ஒழுங்கை நோக்கி நகர்த்துகிறது" என்று கூறியுள்ளனர்.

இருப்பினும் இந்த R-பிளாக்கில் சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சீன ரென்மின்பி மிகவும் வலிமையான போட்டியாளர், ஆனால் மூலதனக் கட்டுப்பாடுகளில் உள்ள சிக்கல்கள் அதன் வளர்ச்சியைத் தடுக்கின்றன. இந்தியா ரூபாய் அடிப்படையிலான வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது. அதன் வேகமாக வளரும் பொருளாதாரம் அதன் நம்பகத்தன்மைக்கு உதவுகிறது, ஆனால் ரூபாயின் ஏற்றத்தாழ்வு மற்றும் குறைந்த உலகளாவிய தேவை நமக்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறது.

பிரேசிலின் ரியால், பிராந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால், இது வளங்களை சார்ந்துள்ளது மற்றும் நிலையற்றது. ரஷ்ய ரூபிளுக்கு நடந்து வரும் பொருளாதார தடைகளால் வெளிப்படையான சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் டாலரை வீழ்த்துவதிலும், அதற்கு போட்டிளாராக R-பிளாக்கை உருவாக்குவதிலும் இந்தியா மிக முக்கியமான பங்கை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+