Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிட்டன் பிரதமராகிறார் ரிஷி சுனக்: கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு பதிலாக ஒருசிலர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவின் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருவது ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலகியதை அடுத்து லிஸ் டிரஸ் புதிய பிரதமராக பதவியேற்றார்.

ஆனால் அவரும் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனால் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மீண்டும் பிரிட்டன் பிரதமர் தேர்தலில் போட்டியிட்டார்.

இங்கிலாந்து புதிய பிரதமர்

இங்கிலாந்து புதிய பிரதமர்

இதில் அவரை எதிர்த்து நின்றவர் வாபஸ் வாங்கியதால், தற்போது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகியுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்க உள்ளது வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது. ரிஷி சுனக்கின் இந்த சாதனை குறித்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த 2 நாட்களாக ரிஷி சுனக் குறித்த செய்தி டிரெண்ட் ஆகி வருகிறது.

ரிஷி சுனக்கிற்கு பதிலாக ஆஷிஷ் நெஹ்ராவுக்கு..

ரிஷி சுனக்கிற்கு பதிலாக ஆஷிஷ் நெஹ்ராவுக்கு..

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமாரக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு பதிலாக ஒரு சிலர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பாஸ்ட் பவுலர் ஆஷிஷ் நெஹ்ராவின் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். மேலும் சிலர் பார்ப்பதற்கு ஒரே போல் தோற்றம் கொண்டிருப்பதால் இருவரும் அண்ணன் தம்பி என்றும் தற்போது பிரிந்து இருக்கின்றனர் என்றும் ட்விட்டரில் மீம்ஸ்களை வெளியிட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விராட் கோலியுடன் ரிஷி சுனக்

விராட் கோலியுடன் ரிஷி சுனக்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நெஹ்ராவுடன் ஒப்பிட்டு பலரும் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றர். இதில் ஒருவர், இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆஷிஷ் நெக்ரா பதவியேற்க உள்ளதற்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ''சிறு வயதில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் இருக்கும் ரிஷி சுனக் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு, விராட் கோலி மற்றும் நெஹ்ராவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஆஷிஷ் நெஹ்ராவை இங்கிலாந்து அனுப்ப வேண்டும்

ஆஷிஷ் நெஹ்ராவை இங்கிலாந்து அனுப்ப வேண்டும்

மற்றொரு நெட்டிசன், இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள, இந்தியாவினுடைய பொக்கிஷமாக கருதப்படும் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதற்காக ரிஷி சுனக்கை கர்நாடகாவில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு வரவைத்து விட்டு அங்கு டிராபிக்குகளில் அவரை சிக்கவைத்து விட்டு அவருக்கு பதிலாக ஆஷிஷ் நெஹ்ராவை அனுப்பி விடவேண்டும். அவர் கோஹினூர் வைரத்தை மீட்டு வருவார் என்றும் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இருவரும் சகோதரர்கள்

இருவரும் சகோதரர்கள்

இதேபோல் மற்றொரு நெட்டிசனின் பதிவில், "இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஆஷிஷ் நெஹ்ராவும் சகோதரர்கள். கும்பமேளாவின் போது அவர்கள் இருவரும் பிரிந்து வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர்" என்று பதிவிட்டிருந்தார்.

 தீவிர யோசனையில்..

தீவிர யோசனையில்..

மேலும் ஒரு நெட்டிசன் "கோஹினூர் வைரத்தை இந்தியா கொண்டு வர ரிஷி சுனக் ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார்" என்று கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா பயிற்சியின் போது ஒரு துண்டு பேப்படை படித்துக்கொண்டிருப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார்.

மோடியுடன் ஆலோசனை

மோடியுடன் ஆலோசனை

இதைவிட ஒரு படி மேல் சென்று நெட்டிசன் ஒருவர் புகைப்படம் பதிவிட்டுள்ளார். அதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ரிஷி சுனக் கோஹினூர் வைரத்தை மீட்டு வர தீவிர ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார் என்று மோடியுடன் ஆஷிஷ் நெஹ்ரா பேசிக்கொண்டு இருக்கும் படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது இது தொடர்பான மீம்ஸ்கள் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+