பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேராவுக்கு சிக்கல்.. நில மோசடி வழக்கில் அமலாக்க துறை அதிரடி
டெல்லி: ஷிகோபூர் நில ஒப்பந்தம் குறித்த ஊழல் புகார் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை இரண்டாவது முறையாக இன்று விசாரணை நடத்துகிறது. டெல்லியில் உள்ள தனது இல்லத்திலிருந்து அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு நடந்தே சென்ற ராபர்ட் வதேரா, தன் மீதான ஊழல் புகார்களை நிராகரித்தார். இது அரசியல் பழிவாங்கல் என்றும் சாடினார்.
ஹரியானாவில் கடந்த 2008- 2012 காலகட்டத்தில் ஷிகோபூர் நில ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப் யுனிவர்சல் லிமிடெட் இடையேயான நில ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்தது என்பதே புகாராகும்.

ஹரியானா நிலமோசடி
ஹியானா மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா என்பவர் கடந்த 2012ல் சொத்து பரிமாற்ற செயல்முறையை ரத்து செய்தபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நில மோசடி புகாரை வைத்தே 2014 ஹரியானா சட்டசபைத் தேர்தலை பாஜக சந்தித்தது. நில மோசடி குறித்து 30 பக்க புத்தகத்தையே பிரச்சாரத்திற்காக வெளியிட்டது. இது ஹரியானா தேர்தலில் பாஜக வெல்லக் காரணமாக அமைந்தது.
அமலாக்கத் துறை விசாரணை
இந்த நில மோசடி தொடர்பான வழக்கை இப்போது அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் ராபர்ட் வதேராவை ஏற்கனவே ஒரு முறை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இருப்பினும், அப்போது அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இன்று இரண்டாவது முறையாக அவரை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதனால் தனது இல்லத்திலிருந்து அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு ராபர்ட் வதேரா நடந்தே சென்றார்.
ராபர்ட் வதேரா மறுப்பு
மேலும், தன் மீதான ஊழல் புகார்களை நிராகரித்த அவர், இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனச் சாடினார். இவர் மேலும் கூறுகையில். "இது அரசியல் பழிவாங்கல்.. விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. நாடாளுமன்றத்தில் எப்படி ராகுல் காந்தியைப் பேச விடாமல் தடுக்கிறார்களோ.. அதேபோல என்னையும் பேச விடாமல் முடக்குகிறார்கள். நான் மக்களுக்காகப் பேசும்போது எல்லாம் அவர்கள் என்னை அடக்க முயல்கிறார்கள். ஏற்கனவே இந்த விவகாரத்தில் தேவையான விளக்கங்களை அளித்துவிட்டேன். மீண்டும் அதே விளக்கத்தை அளிக்கப் போகிறேன்" என்றார்.
வழக்கின் பின்னணி
ராபர்ட் வதேரா கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்த ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அடுத்த ஆண்டு, அந்த நிறுவனம் ஹரியானாவின் குர்கானில் உள்ள மானேசர்-ஷிகோபூர் என்ற இடத்தில் சுமார் 3.5 ஏக்கர் நிலத்தை ரூ.7.5 கோடிக்கு வாங்கியது. மறுநாளே நிலம் ஸ்கைலைட் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டது. பொதுவாக இந்த செயல்முறைக்குக் குறைந்தது 3 மாதங்கள் ஆகும். ஆனால், 24 மணி நேரத்தில் ஆவண பதிவுகள் எல்லாம் நடந்து முடிந்தது.
சரியாக ஒரு மாதம் கழித்து அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு புதிய வீட்டு வசதி திட்டத்தை அறிவித்தது. அதுவும் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்திற்குச் சொந்தமான பெரும்பாலான இடங்களை இந்த புதிய வீட்டு வசதி திட்டம் கவர் செய்தது. இதனால் அந்த நிலத்தின் மதிப்பு உடனடியாக அதிகரித்தது. கடந்த 2008இல், அதே இடத்தை டிஎல்எஃப் நிறுவனம் ரூ.58 கோடிக்கு வாங்க ஒப்புக்கொண்டது. அதாவது வெறும் சில மாதங்களில், வதேரா வாங்கிய சொத்தின் மதிப்பு சுமார் 700% அதிகரித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications