44 இடங்களில் நாளை வேலைவாய்ப்பு திருவிழா... 70,000 பேருக்கு நியமன கடிதங்கள் வழங்கும் பிரதமர் மோடி!
டெல்லி: மத்திய அரசு பணிகளில் சேரும் 70,000 பேருக்கு வேலைவாய்ப்பு நியமன கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி 44 இடங்களில் நாளை நடைபெறும் வேலைவாய்ப்பு திருவிழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழங்க உள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசுப் பணிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு 22.07.2023 அன்று காலை 10.30 மணி அளவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின்போது பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் உரையாற்றவுள்ளார்.

நாடு முழுவதும் 44 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா எனப்படும் ரோஜ்கர் மேளா நடைபெற உள்ளது. இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்புகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் புதிய பணியாளர்கள், வருவாய்த் துறை, நிதி சேவைகள் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நீர்வளத் துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் பணியில் சேரவுள்ளனர்.
வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக இந்த ரோஸ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் அமைந்துள்ளன. ரோஸ்கர் மேளாக்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஒரு ஊக்க சக்தியாக செயல்படும். இளைஞர்களுக்கு அதிகாரமளித்து தேச வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை இது வழங்கும்.
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி இணையதளத்தில் உள்ள இணையதளப் பயிற்சித் தொகுப்பான கர்மயோகி பிரரம்ப் மூலம் பயிற்சி பெறுவார்கள். அதில் 580 க்கும் மேற்பட்ட மின் கற்றல் தொகுப்புகள் எங்கிருந்தும் எந்த சாதனத்தின் மூலமும் கற்றல் என்ற வடிவத்தில் கிடைக்கின்றன. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications