கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்: பிரதமர் மோடி
டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் ஏராளமானோர் உறவுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இதில் நாடு முழுவதும் பல குழந்தைகள் தங்கள் தாய் மற்றும் தந்தையை இழந்து அனாதைகள் ஆகி உள்ளனர்.

அந்தந்த மாநில அரசுகள் குழந்தைகளுக்கு நிதி உதவிகள் அறிவித்து வருகின்றன. தமிழக அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அத்துடன் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது வரை மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும். உயர் கல்வி பயில்வதற்கு உதவி அளிக்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகள் 23 வயது ஆகும் போது, அவர்களுக்கு 10 லட்சம் வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.. நம் குழந்தைகளைப் பராமரிப்பதும், பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தூண்டுவதும் நமது சமுதாயத்தின் கடமை என்று அந்த அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications