சிக்கிய விஜய் மல்லையா, நீரவ் மோடி.. மொத்தம் 15 ஆயிரம் கோடி வசூல்.. மத்திய அரசு மாஸ் தகவல்
டெல்லி: நாட்டை விட்டு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரிடம் இருந்து மொத்தம் ரூ15,113 கோடி மீட்கப்பட்டு நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பங்கஜ் சவுத்ரி அளித்த பதில்: வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடிய மொத்தம் 19 பேர். இந்த 19 பேரில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, , ஹிதேஷ் குமார் நரேந்திரபாய் படேல், ஜுனைத் இக்பால் மேமன், ஹஜ்ரா இக்பால் மேமன், ஆசிப் இக்பால் மேமன் ஆகியோர் தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் ரூ40,000 கோடி மோசடியில் தொடர்புடையவர்கள். எஞ்சிய 9 பேரை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் பிரகடனம் செய்ய அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

ரூ15,113 கோடி மீட்பு: விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து இதுவரை ரூ15,113 கோடி மீட்கப்பட்டு நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேசரா குடும்பம்: இவர்களில் நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, சேத்தன் ஜெயந்திலால் சந்தேசரா, திப்தி சேத்தன் ஜெயந்திலால் சந்தேசரா மற்றும் மற்றும் ஹிதேஷ் குமார் படேல் குஜராத்தின் முன்னணி மருந்து நிறுவனமான ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள். இவர்கள் முன்னர் உலகின் 6-வது பெரிய ஜெலட்டின் உற்பத்தி நிறுவனம் நடத்தியவர்கள்.
இக்பால் மிர்சி குடும்பம்: ஜுனைத் மேமன், ஹஜ்ரா மேமன் மற்றும் ஆசிப் மேமன் ஆகியோர் நிழல் உலக தாதா இக்பால் மிர்சி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இக்பால் மிர்சிதான், இந்தியாவை இன்னும் மிரள வைக்கும் நிழல் உலக தாதா, 1993 மும்பை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் வலதுகரம்.
4 பேர் நாடு கடத்தல்: விஜய் மல்லையா நாடறிந்த மதுபான தொழிற்சாலைகளின் அதிபர். மற்றொருவரான நீரவ் மோடி, குஜராத்தின் நகை வர்த்தகர். ராமச்சந்திரன் விஸ்வநாதன், தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தைச் சேர்ந்தவர். நாட்டை விட்டு தப்பி ஓடியவர்களில் இதுவரை 4 பேர் மட்டுமே இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் அல்லது திருப்பி அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
ஆனால் யார் யாரிடம் இருந்து எவ்வளவு தொகை மீட்கப்பட்டது என்கிற விரிவான விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications