"ரூ.2000" மாத்திட்டீங்களா.. 2000 ரூபாய் நோட்டை திரும்பபெறும் ரிசர்வ் வங்கி.. எஸ்பிஐ தந்த செம நியூஸ்
டெல்லி: 2000 ரூபாயை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், எஸ்பிஐ முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.. இதுகுறித்த அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.. இதையடுத்து, இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணியும் துரிதமாக ஆரம்பமானது..
செப்டம்பர் 30-ந் தேதி வரை இதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.,. ஆரம்பத்தில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி குறைவாகவே இருந்தது..

ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அதிக அளவில் டெபாசிட் செய்யப்படுவதாக கூறப்பட்டன.. முக்கியமாக, 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனைகள் வங்கிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை காண முடிந்தது என்று செய்திகள் வெளியாகின..
வங்கிகள்: வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக அளவில் பங்களிப்பு இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும், ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்திய எஸ்பிஐ வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பது குறித்து ஒரு பிரத்யேக அறிக்கையே வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "2000 ரூபாய் நோட்டு திரும்ப பெற்றதில் இந்தியாவில் நுகர்வு பிரிவில், கிட்டத்தட்ட 55000 கோடி ரூபாய் அளவிலான தொகை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பிற்கு பிறகு, தங்கம், ஏசி, மொபைல், போன், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் பணத்தை செலவு செய்து உள்ளதாகவும், பெட்ரோல் பங்களில் மக்கள் அதிகப்படியான 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் செலவு செய்வதாகவும் சுட்டிகாட்டி உள்ளது.
அறிக்கை: இந்த தகவலை All-India Petroleum Dealers Association (AIPDA) என்ற அமைப்பு தெரிவித்துள்ளதாம்.. அத்துடன், ஈகாமர்ஸ், டிஜிட்டல் சேவைகளில் பெரும்பாலான கேஷ் ஆன் டெலிவரிகளுக்கு 2000 ரூபாய் நோட்டு கொடுக்கப்பட்டிருப்பதாகவும், 2000 ரூபாய் நோட்டு மூலம் பெறப்பட்ட 92000 கோடி ரூபாய் அளவிலான வங்கி டெபாசிட் தொகையில், சுமார் 55000 கோடி ரூபாயை மக்கள் திரும்பபெற்று இருப்பதாகவும், அந்த அறிக்கையில் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்ல, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதால் வங்கிகளில் டெபாசிட்டுகள் அதிகரிக்கும்.. கடன்கள் திருப்பி செலுத்தப்படுவது அதிகரிக்கும்.. நுகர்வு அதிகரிக்கும், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய்க்கு வேகம் கிடைக்கும், ஜிடிபி உயருவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.. ரூ.2000 நோட்டுகள் உயர் மதிப்புடையது என்பதால், டிஜிட்டல் ரூபாய்க்கு மாறுவது எளிதாகும் என்றும் அந்த எஸ்பிஐ அறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications