தீபாவளி: ரூ 30 ஆயிரம் கோடிக்கு தங்கம், வெள்ளி விற்பனை.. தந்தேரா தினத்தில் வாங்கி குவித்த மக்கள்
டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியாவில் ரூ 30 ஆயிரம் கோடிக்கு தங்கம், வெள்ளி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகை வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எப்போதுமே பண்டிகை உள்ளிட்ட நல்ல நாட்களில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளை வாங்குவது பலரது விருப்பமாக இருக்கிறது. அதிலும் தீபாவளி பண்டிகைக்கு புது மாப்பிள்ளைக்கு மோதிரம் போடுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளிக்கு மோதிர விற்பனை ஜோராக இருக்கும். பிரேஸ்லெட் உள்ளிட்ட நகைகளின் விற்பனையும் சூடு பிடிக்கும்.

அது போல் ஒரு சிலர் தீபாவளிக்கு பரிசாக பெண்களுக்கும் தங்கம் வாங்கிக் கொடுப்பர். இதனால் தீபாவளிக்கும் ஆடி மாதம் கழித்தும் புத்தாண்டு உள்ளிட்ட நல்ல நாட்களில் தங்கம் விற்பனை சற்று அதிகமாகவே இருக்கும். அது போல் வெள்ளி விற்பனையும் அதிகமாகவே இருக்கும்.
அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம், வெள்ளி, வாகன விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது இந்தியா முழுவதும் தங்கமும் வெள்ளியும் ரூ 30 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகை வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதாவது 41 டன் தங்கமும், 400 டன் வெள்ளியும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 15 வரை 6 நாட்களுக்கு தங்கத்தின் விற்பனை அதிகரிக்கும் என்கிறார்கள். அது போல் தங்கம் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 20 சதவீதம் அதிகமாக விற்பனையாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அது போல் கார் வாகன விற்பனையும் இந்த ஆண்டு இரு மடங்கு அதிகரித்துள்ளது.
தந்தேரா தினத்தில் இரு மடங்கு கார் விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு 32 ஆயிரம் கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 55 ஆயிரம் மாருதி சுசூகி கார்கள் விற்பனை ஆகியுள்ளது. ஹுண்டாய் கார்கள் 10300 க்கும் மேற்பட்டவை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தன்வந்திரி பகவான் அவதரித்த தினத்தை நாம் தந்தேரா தினம் என கொண்டாடுகிறோம். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், கடவுள்களுக்கும் இவர் தான் மருத்துவராக இருந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. தன்வந்திரி பகவான் அவதரித்த தந்தேரா தினமானது ஆயுர்வேத தினமாக மட்டுமல்லாமல், தீபாவளி பண்டிகை தொடக்க நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தங்கம், வெள்ளி, வாகனங்கள், சொத்துகள் வாங்கினால் சிறப்பு என்பதால் பலர் இந்த நாளில் வாங்குகிறார்கள். தந்தேரா தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications