டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ. 5085 கோடி கடன் தொகை பாக்கி.. மின்சாரம் வாங்க விற்க 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு தடை

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு நேற்று இரவு முதல் தடை விதித்துள்ளது. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 13 மாநிலங்கள் நிலுவைத் தொகை செலுத்தவில்லை என்று கூறி மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    Electricity Bill மக்களை நேரடியாக பாதிக்கும் | KS Alagiri Speech

    மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் (POSOCO) செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் (Gencos) மூலம் மாநிலங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்களுக்கு(discoms) மின்சாரம் வழங்கப்படுகிறது.

    இதையடுத்து டிஸ்காம்ஸ் சார்பில் மின்சார உற்பத்தி நிறுவனங்கங்களுக்கு(gencos) பணம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது பல மாநிலங்களில் உள்ள டிஸ்காம்ஸ் சார்பில் மின்சாரத்துக்கு பணம் செலுத்தாமல் உள்ளது.

    இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயரும்? - மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அனுமதி கேட்ட மின் வாரியம்! இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயரும்? - மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அனுமதி கேட்ட மின் வாரியம்!

    ரூ.5085 கோடி பாக்கி

    ரூ.5085 கோடி பாக்கி

    குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் மின் வினியோக நிறுவனங்கள் பாக்கி தொகை வைத்துள்ளன. இந்த 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் சார்பில் மொத்தம் ரூ. 5085 கோடி கோடி வரை பாக்கி வைக்கப்பட்டுள்ளது.

    எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு

    எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு

    இதில் தெலங்கானா அதிகபட்சமாக ரூ.1,380 கோடி பாக்கி வைத்துள்ளது. தமிழ்நாடு ரூ.926.16 கோடி பாக்கி உள்ளது. மேலும் கர்நாடகாவில் 355.2 கோடி, மகாராஷ்டிராவில் 381.66 கோடி, மத்திய பிரதேசத்தில் 229.11 கோடி, ராஜஸ்தானில் 500.66 கோடி, ஆந்திராவில் 412.69 கோடி, ஜார்கண்டில் 214.47 கோடி வரை கடன் உள்ளது.

     கடன் நிலுவைத் தொகை

    கடன் நிலுவைத் தொகை

    இதற்கிடையே தான் புதிய லேட் பேமென்ட் சர்சார்ஜ் (எல்பிஎஸ்) விதிகளின் கீழ் 7 மாதங்களுக்கும் மேலாக டிஸ்காம்கள் நிலுவை தொகையை செலுத்தாமல் இருந்தால் அவை மின்சார வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது. இதனால் கடனாக உள்ள பாக்கி தொகை செலுத்தவில்லை என்றால் மின்வர்த்தகத்தில் தடை விதிக்க முடியும். இந்த புதிய நடைமுறை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து உள்ளது.

    மின் தடை ஏற்பட வாய்ப்பு

    மின் தடை ஏற்பட வாய்ப்பு

    இதன் மூலம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 13 மாநிலங்கள் நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனக்கூறி மத்திய நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் மீண்டும் தமிழ்நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    English summary
    The central government has banned the sharing of electricity between 13 states including Tamil Nadu since last night. The central government has taken this step saying that 13 states have not paid dues to the power generation companies. Central government interference in inter-state power distribution has led to the risk of power outages in many states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X