Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொதுத்துறை விற்பனை, தாலிபான்கள், பணவீக்கம்- மத்திய அரசு மீது ஆர்.எஸ்.எஸ்.-க்கு அதிருப்தியா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, தாலிபான்கள் விவகாரம் உள்ளிட்டவைகளில் மத்திய பா.ஜ.க. அரசு மீது அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொழிற்சங்கம், விவசாய சங்கம் ஆகியவை மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதாகவும் அறிவித்துள்ளன.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) ஆட்சியில் இருந்தாலும் அதன் செயல்பாடுகளை அக்கட்சியின் கொள்கை வகுப்பு அமைப்பான தாய் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். கண்காணித்தும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. மத்திய அரசின் பல்வேறு முடிவுகள் ஆர்.எஸ்.எஸ். இயக்க கொள்கைகளை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

அதேநேரத்தில் கடந்த 7 ஆண்டுகளில் மத்திய பா.ஜ.க. அரசின் நிலைப்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொழிலாளர் சங்கம், விவசாய சங்கம், சுதேசி இயக்கம் ஆகியவை முழுமையாக ஆதரிக்கவும் இல்லை. மத்திய அரசின் கொள்கை முடிவுகளை விமர்சித்து போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கிறது.

விவசாய சட்டங்களில் அதிருப்தி

விவசாய சட்டங்களில் அதிருப்தி

உதாரணமாக மத்திய அரசு புதிய விவசாய சட்டங்களைக் கொண்டு வந்த போது ஆர்.எஸ்.எஸ்.-ன் பாரதிய கிசான் சங்கம் அதற்கு எதிராக குரல் கொடுத்தது. பாரதிய கிசான் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்ய ஏற்கனவே இருக்கும் சட்டங்களைத் திருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் பத்ரி நாராயண் சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்டம்பர் 8-ந் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொழிற்சங்கம் பாரதிய மஸ்தூர் சங்கம். நாட்டின் மிகப் பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்று. இந்த அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செப்.9ல் போராட்டம்

செப்.9ல் போராட்டம்

பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பினய் குமார் சின்ஹா கூறுகையில், கொரோனா பரவல் காலத்துக்குப் பின்னர் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வேலைகளை இழந்துள்ளனர். பணவீக்க விகிதம் கட்டுப்படுத்தப்படவில்லை. தொழிலாளர்கள் ஊதிய ,குறைப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்றார். மேலும் இந்த கோரிக்கைகளை முன்வைத்து வரும் 9-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். அத்துடன், மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே வரி என சொல்கிறது.. ஆனால் ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல் கொண்டுவரப்படவில்லை? அப்படி கொண்டு வந்திருந்தால் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் விலை உயர்வால் சாமானியர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் அல்லவா? மருந்துகள் தயாரிப்பு துறையை எடுத்துக் கொண்டால் கணக்கே இல்லாமல் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். கள்ள சந்தையில் பதுக்கலைத் தடுக்க சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகளை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் பினய் குமார் சின்ஹா வலியுறுத்தினார்.

Recommended Video

    Afghanistan-ல் மீண்டும் Sharia சட்டம்: முன்பு Taliban பெண்களுக்கு என்ன கட்டுப்பாடுகள் விதித்தார்கள்?
    பணமாக்கல் திட்டம்

    பணமாக்கல் திட்டம்

    மேலும் மத்திய அரசு அண்மையில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விட்டு ரூ6 லட்சம் கோடி பணமாக்கும் திட்டத்தை அறிவித்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் சுதேசி ஜாக்ரன் மஞ்ச், மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. என்னதான் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பற்றாக்குறை தொடரவே செய்கிறது. இது தொடர்பாக விரைவில் எங்கள் கருத்துகளை தெரிவிக்க உள்ளோம் என்கிறது. தேசிய பணமாக்கல் திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பினய் குமார் சின்ஹா, கார்ப்பரேட் மயமாக்கலும் தேசிய பணமாக்கல் திட்டமும் வார்த்தை ஜாலங்களில் வேறுபடுத்தப்படுகிறது. அரசுக்கு வருவாயை பெருக்க பல்வேறு வழிகள் இருக்கின்றன. வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை வலிமையாக்க வேண்டும் என்கிற நடவடிக்கைகள்தான் இப்போது தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

    தாலிபான்களுடன் பேச்சு

    தாலிபான்களுடன் பேச்சு

    இதற்கு அப்பால் தாலிபான்கள் விவகாரம் தொடர்பான மத்திய அரசின் நிலை குறித்தும் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய போது, இந்துக்களையும் சீக்கியர்களையும் மத்திய அரசு பாதுகாப்பாக வெளியேற்றியது பாராட்டுக்குரியதுதான்.. ஆனால் கத்தாரின் தோஹாவில் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது மத்திய அரசு என்கிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கிளை அமைப்புகள் மத்திய பா.ஜ.க. அரசு மீது அதிருப்தியை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+