24 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் சேவை.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. பொதுமக்கள் வரவேற்பு
டெல்லி: இந்த ஆண்டு டிசம்பர் முதல் ஆர்.டி.ஜி.எஸ் (ரியல் டைம் மொத்த தீர்வு) அமைப்பு முறையில் 24 மணி நேரமும் (24x7) பணம் அனுப்ப முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இது பற்றி கூறுகையில், "உள்நாட்டு வணிக நிறுவனங்களுக்கு நிகழ்நேரத்தில் விரைவாக மற்றும் தடையற்ற வகையில் பணம் பெறுவதையும், அனுப்புவதையும் எளிதாக்கும் வகையில், இந்த ஆண்டு டிசம்பர் முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் முறை செயல்படும். 24x7x365 என்ற முறையில் ஆர்டிஜிஎஸ் வசதி செயல்படும் உலகின் ஒருசில நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் மாறி உள்ளது" என்றார்.
வங்கி ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் நேஷனல் எலெக்ட்ரானிக் பண்டு டிரான்ஸ்பர் என்று அழைக்கப்படும் என்.இ.எப்.டி (NEFT) மற்றும் ரியல் டைம் செட்டில்மெண்ட் சிஸ்டம் மற்றும் உடனடி பண பரிவர்த்தனை (ஐஎம்பிஎஸ்) ஆகியவை உள்ளன. இதில் ஆர்.டி.ஜி.எஸ் (RTGS) மற்றும் என்.இ.எப்.டி மிகவும் முக்கியமானதாகும். என்.இ.எப்.டி, படி 2 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட தொகைகளை அனுப்ப முடியும். ஆர்.டி.ஜி.எஸ் என்பது, பெரிய தொகைகளின் பரிவர்த்தனைக்கானது. எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்ப முடியும்

இருமுறைக்கும் ரத்து
இந்த முறைகளில் பரிவர்த்தனை மேற்கொள்ளும்பட்சத்தில் வங்கி சார்பில் குறிப்பிட்ட அளவிலான பணம் வசூலிக்கப்பட்டது.. இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை 1 முதல் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை ஊக்குவிக்கும் வகையில் ஆர்.டி.ஜி.எஸ் மற்றும் என்.இ.எப்.டி முறைகளில் விதிக்கப்பட்ட கட்டணங்களும் முழுமையாக ரத்து செய்து அறிவித்தது.

இப்போது ஆர்.டி.ஜி.எஸ்
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் முதல், ரிசர்வ் வங்கி 24x7x365 அடிப்படையில் தேசிய மின்னணு நிதி பரிமாற்ற (NEFT) முறையை ரிசர்வ் வங்கி மக்களுக்கு கிடைக்கச் செய்தது. இப்போது இந்த ஆண்டு டிசம்பர் முதல் ஆர் டி ஜி எஸ் (ரியல் டைம் மொத்த தீர்வு) அமைப்பு முறையில் 24 மணி நேரமும் (24x7) பணம் அனுப்ப முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

4 சதவீதமாக தொடரும்
ரிசர்வ் வங்கி கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்த கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாக நிர்ணயித்தது. இன்று நடந்த கொள்கை கூட்டத்திலும் ரெப்போ விகதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், 4 சதவீதமாகவே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சக்தி காந்த தாஸ்
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இதுபற்றி கூறுகையில். கொரோனா எங்கள் வளங்களையும், சகிப்புத்தன்மையையும் சோதித்துப் பார்த்துள்ளத.. எங்கள் துன்பங்கள் இன்னும் முடிவடையவில்லை.தொற்றுநோய்கள் இன்னமும் தீவிரமான ஆபத்தாகவே உள்ளது. எனினும், நாங்கள் இதுவரை பயணிக்காத இந்த பாதையில், தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் கடந்து வந்துள்ளோம் " என்றார்.

லாக்டவுனால் பாதிப்பு
நடப்பு நிதியாண்டில் (2020-21) மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 9.5 சதவீதம் ஆக குறைய வாய்ப்புள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய புள்ளிவிவர அலுவலகத்தின் (சிஎஸ்ஓ) மதிப்பீடுகளின்படி, நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதமாக சுருங்கியது. கொரோனா வைரஸின் பரவல் மற்றும் அதன் விளைவாக போடப்பட்ட லாக்வுடன் ஆகியவை நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications