பக்கா ஸ்கெட்ச் போட்ட இந்தியா.. நடுநிலையால் “மெகா ஆஃபர்” கொடுத்த ரஷ்யா..இந்த விலைக்கு கச்சா எண்ணெயா?
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலைத்தன்மை இல்லாமல் உள்ளது
உக்ரைன் ரஷ்யா போருக்கு முன்னதாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 80 டாலருக்கும் கீழ் ஆகவே இருந்து வந்தது.
போருக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது. மார்ச் மாத தொடக்கத்தில் 110 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெயின் விலை தற்போது 98.62 டாலராக உள்ளத்

பெட்ரோல் டீசல் விலை
சுமார் 37 நாட்களாக உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 98.62 டாலராக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 7492.23 ரூபாயாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை உள்ளது. உத்திரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதி
பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்துள்ளது, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் சாதனை உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பு காரண்=அமாக உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. தொடர்ந்து மற்ற நாடுகளுக்கான விற்பனை குறைந்து வருவதால், ரஷ்யா நேரடியாக எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு பெரிய தள்ளுபடியை வழங்குகிறது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

மிகப் பெரிய தள்ளுபடி
தற்போதைய நிலவரப்படி ரஷ்யா உயர் தர எண்ணெயை பீப்பாய் ஒன்றுக்கு 35 டாலர் வரை விற்கத் தயாராக உள்ளது. இந்தியா முதல் ஒப்பந்தத்தில் 15 மில்லியன் பீப்பாய்களை வாங்க விரும்பும் நிலையில் இது மிகப்பெரிய தள்ளுபடியாகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான இந்தியாவின் முடிவை உறுதி படுத்தியுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் விமர்சிக்கப்பட்டாலும், இந்தியாவை விட ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா அதிகமாக கச்சா எண்ணெயை விற்பனை செய்கிறது என்றும், வளர்ந்து வரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போட்டி சலுகைகளை இந்தியா வரவேற்கிறது என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார். "விலைகள் உயரும்போது, நாடுகள் தங்கள் மக்களுக்கு நல்ல ஒப்பந்தங்களைத் தேடுவது இயல்பானது என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். பிப்ரவரியை விட மார்ச் மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் கிட்டத்தட்ட 15 சதவீதம் அதிக எண்ணெயை வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications