Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவி திருவள்ளுவர்.. எல்.முருகனின் தமிழ் புத்தாண்டு விழா இருந்த படம்! மோடி பங்கேற்ற விழாவில் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட எல்.முருகன் இல்ல தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு விருந்தில் காவி உடையுடன் இருக்கும் திருவள்ளுவரின் படம் வைக்கப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உலக பொதுமறையாக கருதப்படும் திருக்குறளை வழங்கி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் திருவள்ளுவர். ஏழே வார்த்தைகளில் ஏக உலகத்திற்கும் தேவையான கருத்துக்களை கூறியவர். பல்வேறு துறைகள் சார்ந்து திருக்குறளில் இருக்கும் கருத்துக்கள் இந்த காலத்திற்கும் அப்படியே பொருந்திப்போகிறது. தமிழின் பெருமையாகவும், சாதி மதம் கடந்து அனைத்து தமிழர்களாலும் போற்றப்படும் நூலாக திருக்குறள் இருந்து வருகிறது.

Saffron Thiruvalluvar photo placed in L Murugan Tamil new year

எந்த சாதி, மதம் சார்ந்த கருத்துக்களையும் பிரதிபலிக்காமல் தனித்து நிற்பதால் மட்டுமே திருக்குறளை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகிறார்கள். தமிழர்கள் மட்டுமின்றி பிற மாநில மக்களும், வெளிநாட்டவர்களும் கூட திருக்குறளை ஆய்வு செய்து அதில் இடம்பெற்று உள்ள கருத்துக்களை வியந்து போற்றி வருகிறார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவராகவே இன்று வரை பார்க்கப்பட்டு வருகிறார். நிலைமை இப்படி இருக்க பாஜகவினர் அவரை குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவராக தொடர்ந்து சித்தரித்து வருகின்றனர். தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காவி உடையும், நெற்றி, கழுத்து, கையில் திருநீறும், குங்குமமும் வைத்து இந்து மத துறவிபோல் திருவள்ளுவரை வடிவமைத்த புகைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை பதிவு செய்தார்கள். அனைத்து மதத்தினராலும் போற்றப்படும் திருவள்ளுவரை குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவராக சுருக்குவது தவறு என்று கண்டித்தனர். ஆனால், இன்று வரை பாஜகவும், வலதுசாரிகளும் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தையே இன்று வரை சமூக வலைதளங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது இல்லத்தில் நடத்திய நிகழ்ச்சியில் காவி உடையுடன் இருக்கும் திருவள்ளுவரின் படத்தை வைத்து இருக்கிறார்கள். அதில் "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்ற முதல் குறள் மற்றும் பேராசிரியர் சுந்தர சண்முகனார் எழுதிய திருக்குறள் விளக்க புத்தகத்தின் படமும் காட்சிபடுத்தப்பட்டு இருக்கிறது.

Saffron Thiruvalluvar photo placed in L Murugan Tamil new year

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி விநாயகர் ஆராத்தியுடன் தொடங்கியது. தமிழர்களின் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ் சினிமா பாடல்கள் ஒலிக்கப்பட்டு நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான தமிழ் மக்கள், பாஜகவினர் பலர் பங்கேற்று இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து எல்.முருகன் இல்லத்தில் வழங்கும் சிறப்பு விருந்திலும் அனைவரும் பங்கேற்றனர். இப்படி நாட்டின் முக்கிய தலைவர்கள், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட விழாவில் திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் படத்தை வைத்து அவரை குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவராக காட்டி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+