பாறை இடுக்கில் கிடைத்த மனித மூளை வெற்றி துரைசாமியினுடையதா?.. இன்று டிஎன்ஏ பரிசோதனை
டெல்லி: இமாச்சல் பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றங்கரையில் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி காணாமல் போன நிலையில் பாறை இடுக்கில் மனித மூளை கிடைத்துள்ளதால் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அபிமானி. இவர் எம்ஜிஆர் மரணத்திற்கு பிறகு அதிமுகவிலிருந்து விலகியே இருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சைதை துரைசாமிக்கு 2011 ஆம் ஆண்டு கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்த தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் சைதை துரைசாமிக்கு வாய்ப்பு கொடுத்த ஜெயலலிதா அவரை சென்னை மேயர் வேட்பாளராக்கினார். இதையடுத்து 2011 ஆம் ஆண்டு சென்னையின் 48ஆவது மேயராக பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பதவிக்காலம் முடிந்ததும் அவர் அரசியலில் இருந்து மீண்டும் ஒதுங்கியே உள்ளார்.
மனிதநேய அகாதெமி என்ற பெயரில் இலவச ஐஏஎஸ் பயிற்சியை அளித்து வருகிறார். இதற்கு அவருடைய மகன் வெற்றியும் உறுதுணையாக இருந்து வருகிறார். அது போல் வெற்றி இயக்குநராகவும் உள்ளார். அவர் தனது உதவியாளர் கோபிநாத்துடன் இமாச்சல் பிரதேசத்தில் ஒரு த்ரில்லர் படம் எடுக்க லொகேஷன் பார்க்க சென்றார்.
அப்போது அவர் பயணித்த கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்த நிலையில் தகவலறிந்த போலீஸார் காரை மீட்டு அதிலிருந்து ஓட்டுநர் டென்சினின் உடலை மீட்டனர். இதையடுத்து காயங்களுடன் ஆற்றின் கரையில் இருந்த கோபிநாத்தையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடி வருகிறார்கள். அங்கு கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் வெற்றியின் உடலை தேடுவதில் தொய்வு ஏற்பட்டது. சைதை துரைசாமியும் தனது மகனின் நிலை அறிய அங்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இந்திய விமான படை, இந்திய கடற்படை தேடி வருகிறார்கள். இதற்காக சென்னை அடையாறு தளத்திலிருந்து சிறந்த வீரர்கள் இமாச்சல் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ஆற்றங்கரையில் தேடும் போது மனித உடல் பகுதி கிடைத்ததாகவும் அது சந்தேகத்தின் பேரில் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த மூளை வெற்றியினுடையதாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இதனால் அந்த மூளை வெற்றியினுடையதா என்பதை அறிய இன்று டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படுகிறது.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்!












Click it and Unblock the Notifications