லோக்சபா தேர்தல் வருகிறதே.. இனி ஹரியானா தாக்குதல் போல நிறைய நடக்கும்! பகீர் கிளப்பும் சத்யபால் மாலிக்
டெல்லி: ஹரியானாவின் நூஹ் நகரில் தொடங்கிய வன்முறை, பல்வேறு பகுதிகளுக்கும் பரவிய நிலையில், இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே ஹரியானா மாநிலத்தில் வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்கு முதலில் நூஹ் மாநிலத்தில் ஆரம்பித்த வன்முறை, அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கும் பரவியுள்ளது.

அங்கு ஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் இணைந்து நடத்திய போராட்டத்தில் தான் வன்முறை ஏற்பட்டது. இதில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
வன்முறை: அங்கு தொடங்கிய வன்முறை மாநிலத்தில் பல்வேறு இடங்களுக்கும் பரவின. இதில் 6 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். வன்முறையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கையுள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அங்கு ஒரு இடத்தில் ஏற்பட்ட வன்முறை பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது தன்னிச்சையானது இல்லை என்றும் அவை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும், வகுப்புவாத பிளவை உருவாக்கும் நோக்கத்துடன் இதைத் திட்டமிட்டு சிலர் நடத்தியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாடு முழுவதும் மணிப்பூர் போல் பற்றி எரியும். "ஜாட்கள் ஆர்ய சமாஜ் வாழ்க்கை முறையை நம்புகிறார்கள். அவர்கள் வன்முறையில் இருந்து விலகியே இருந்துள்ளனர். அதேபோல இந்தப் பகுதி இஸ்லாமியர்களும் அமைதியானவர்கள் தான். சுதந்திரம் அடைந்தது முதலே இங்கு மோதல் இருந்தது இல்லை. லோக்சபா தேர்தல் 2024இல் நடைபெற உள்ள நிலையில், வரும் காலங்களில் வன்முறை அதிகரிக்கவே செய்யும். மணிப்பூரைப் பார்த்தாலே இது நமக்குப் புரியும்.

என்ன நடக்கும்: பொதுமக்களை இரு பிரிவுகளாகப் பிரித்துத் தேர்தல்களில் வெற்றி பெற ஆளும் தரப்பு இதைச் செய்ய முடியும்" என்று மாலிக் கூறினார். அதேநேரம் ராமர் கோயில் தகர்க்கப்படும் என்று அல்-கொய்தா மிரட்டல் விடுத்ததைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அங்கே பாதுகாப்பை அதிகரிப்பது கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய மாலிக், "புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மோடி அதை அரசியலுக்குப் பயன்படுத்தினார். மக்கள் வாக்களிக்கும் போது புல்வாமா தாக்குதலை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த முறை நான் சொல்கிறேன். வாக்களிக்கும் முன்பு புல்வாமா குறித்து நினைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அதில் நமக்குப் பல விடை கிடைக்காத கேள்விகள் இன்னும் உள்ளன.
சரமாரி கேள்வி: அங்கு ஆர்டிஎக்ஸ் எப்படி வந்தது? வாகனம் செல்லும் பாதையை ஆய்வு செய்யாதது ஏன்.. மேலும், விமானம் வேண்டும் என்ற கோரிக்கை மறுக்கப்பட்டது ஏன்.. இப்படிப் பல கேள்விகள் இருக்கிறது. இதற்கான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அன்று என்ன நடந்தது என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் நடந்த போது அங்கு ஆளுநராக சத்யபால் மாலிக் தான் இருந்தார். இந்தத் தாக்குதல் குறித்து ஏற்கனவே உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தாக கூறப்படும் நிலையில், அதற்குப் பதிலளித்த அவர், "ஆளுநர் என்ற முறையில் எனக்கு அப்போது தினசரி மூன்று புலனாய்வு அறிக்கைகளைக் கிடைக்கும். அதில் என் மீது தாக்குதல் நடத்தக் கூடும். அல்லது மாநில அரசு அலுவலங்களில் தாக்குதல் நடத்தக் கூடும் என்றே எச்சரிக்கை வந்திருந்தது.
எச்சரிக்கை தேவை: இதனால் சாலையில் பயணத்தைத் தவிர்த்து ஹெலிகாப்டரில் செல்லுமாறு ராணும் எனக்கு அறிவுறுத்தல் கொடுத்திருந்தது. இருப்பினும், ராணுவ கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் அப்போது எனக்கு வரவில்லை. 2024 தேர்தலுக்கு முன்பும் இதேபோல எதாவது ஒரு சம்பவம் நடக்கலாம். அதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
முக்கிய பாஜக தலைவர் கொலை செய்யப்படலாம். அல்லது ராமர் கோயில் மீது வெடிகுண்டு வீசப்படலாம். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஏன் இப்போது அடிக்கடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார் தெரியுமா.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நமது படைகள் நுழையும் போது, பாக். பதிலடி கொடுக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுக்கவே அவர் அங்குச் செல்கிறார்.
தேர்தல் நெருங்கும் போது இதுபோல எதாவது சென்று தாக்குதல் நடத்துவார்கள். அதை வைத்து வெல்ல நினைப்பார்கள். மக்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications